தவறுதலாக அறிவிக்கபட்ட, அழகி பட்டம் திரும்ப பெறபட்டது..

Read Time:2 Minute, 41 Second

201406281637383029_Miss-Florida-Miscalculation-Leads-To-Crown-Switch_SECVPFஉலக அழகி, பிரபஞ்ச அழகி உள்ளிட்ட பல்வேறு அழகி போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில், அழகு மற்றும் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தியும் அழகியை தேர்வு செய்வர்.

அந்தவகையில் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த அழகி போட்டி ஒன்றில், இளம்பெண் ஒருவருக்கு தவறுதலாக முடி சூட்டப்பட்ட சம்பவம் போட்டி ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இந்த ஆண்டுக்கான ‘மிஸ் புளோரிடா’ அழகியை தேர்வு செய்வதற்காக அங்குள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை அழகி போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளம்பெண்கள் கலந்து கொண்டதுடன், இந்த போட்டியை கண்டு களிப்பதற்காக சுமார் 2 ஆயிரம் பார்வையாளர்களும் அமர்ந்திருந்தனர்.

இந்த போட்டியில் எலிசபெத் பெச்டல் என்ற புளோரிடா பல்கலைக்கழக மாணவி, ‘மிஸ் புளோரிடா’வாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் இவர் தவறுதலாக தேர்வு செய்யப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. பார்வையாளர்கள் அளித்த ஓட்டுக்களை எண்ணியதில் ஏற்பட்ட குளறுபடியால் இந்த சம்பவம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த போட்டி ஏற்பாட்டாளர்கள், அவரிடம் இருந்து அழகி பட்டத்தை திரும்ப பெற்றுள்ளனர். பின்னர் போட்டியில் 2-வது இடத்தில் வந்த விக்டோரியா கவுனுக்கு மிஸ் புளோரிடா அழகி பட்டத்தை வழங்கினர்.

இது குறித்து தலைமை இயக்குனர் மேரி சுல்லிவன் கூறும் போது இந்த தவறு வழக்கமான மறு எண்ணிக்கையின் போது கண்டு பிடிக்கபட்டது.

ஒரு வாக்குச்சீட்டில் உள்ள மதிப்பெண்ணை நடுவர் கவனக்குறைவாக கண்காணிக்கவில்லை. இதனால் மறுபடியும் எண்ணபட்டு உண்மையான வெற்றியாளர் அறிவிக்கபட்டு உள்ளார்.என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனது செல்ல பூனைக்கு, காதலனின் பெயர் சூட்டி பார்ட்டி வைத்த பிரபல பாப் பாடகி..
Next post போரை முடிவுக்கு கொண்டுவர, ரணில் வைத்திருந்த திட்டம்..!! (கட்டுரை)