மன்னாரில் புலிகள் போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழுவினர் சந்திப்பு.

Read Time:1 Minute, 17 Second

Vvuniya+Small.jpgபுலிகளின் மன்னார் மாவட்ட அரசியற்துறையினருக்கும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது. கடற்தொழிலாளர்கள் அனுபவித்துவரும் அவலங்கள் குறித்து இச்சந்திப்பில் ஆராயப்பட்டது. மன்னார் மாவட்டத்தின் கடற்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் அன்புராஜ், மன்னார் கிளிநொச்சி மாவட்ட கடற்புலிகளின் தாக்குதல் தளபதி அச்சுதன் ஆகியோர் கலந்கொண்டனர். அண்மையில் மன்னார் பேசாலைக் கடற்கரையில் புலிகளுக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் பின்னர் மக்கள் கடலில் மீன்பிடிக்கச்செல்ல சிறீலங்கா கடற்படையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அன்றாடம் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலையில் மீனவர்கள் இருப்பது தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நார்வே நாட்டில் பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவிகள் முக்காடு போட்டு வருவதற்கு தடை
Next post மீண்டும் புதுப்பொலிவுடன் இலக்கு இணையத்தளம்