ஆபாச வீடியோ சர்ச்சைக்சையால் அழகுராணி அந்தஸ்தை துறந்த யுவதி
அமெரிக்காவின் மாநில அழகுராணி போட்டியொன்றில் இரண்டாமிடம் பெற்ற பின்னர் ஆபாச வீடியோவில் தோன்றியதால் தனது அந்தஸ்தை இழந்த யுவதி, தற்போது மீண்டும் ஆபாச படங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளார்.
கிறிஸ்டி அல்தாயஸ் எனும் இந்த யுவதி, 2012 ஆம் ஆண்டு பதின்மர் பருவத்தினருக்கான மிஸ் கொலராடோ டீன் யூ.எஸ்.ஏ. மாநில அழகுராணி போட்டியில் இரண்டாமிடம் பெற்றவர். ஆனால், கிறிஸ்டி அல்தாயஸ் தோன்றும் பாலியல் வீடியோவொன்று இணையத்தளங்களில் வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
18 வயது யுவதியாக இருந்தபோது இந்த வீடியோ பதிவுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடும் விமர்சனங்களையடுத்து, அழகுராணி போட்டியில் கிறிஸ்டி அல்தாயஸ் பெற்ற இரண்டாமிடம் கடந்த ஜனவரி மாதம் பறிக்கப்பட்டது.
அத்துடன், மிஸ் யூ.எஸ்.ஏ. அழகுராணி போட்டிகளை நடத்தும் நிறுவனம், தனது இணையத்தளத்திலிருந்து கிறிஸ்டி தொடர்பான சகல தகவல்களையும் நீக்கியது.
பின்னர் கான்சாஸ் பல்கலைக்கழகத்தின் கல்லூரியொன்றில் உயர்கல்வி கற்பதற்காக இணைந்தார். வாழ்க்கையில் கற்ற பாடங்களிலிருந்து அவர் தவறுகளை உணர்ந்து திருந்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது மீண்டும் ஆபாச வீடியோவொன்றில் கிறிஸ்டி அல்தாயஸ் தோன்றியுள்ளார். அவர் பாலியல் படங்களில் நடிப்பதை தொழிலாக மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதும் பல்கலைக்கழக மாணவியாக உள்ள கிறிஸ்டி அல்தாயஸ், மேற்படி வீடியோ வெளியான பின் தனது டுவிட்டர் கணக்கையும் அழித்துவிட்டுள்ளார். மிஸ் டீன் யூ.எஸ்.ஏ. அழகுராணி போட்டிகளில் பங்குபற்றியவர்களில் இத்தகைய ஆபாச வீடியோ சர்ச்சைக்குள்ளான ஒரே பெண் கிறிஸ்டி அல்தாயஸ் அல்லர்.
டெலவெயார் மாநிலத்தின் மிஸ் டெலவெயார் டீன் யூ.எஸ்.ஏ. அழகுராணியாக கடந்த நவம்பர் மாதம் முடிசூட்டப்பட்ட மெலிஸா கிங் எனும் யுவதியின் ஆபாச வீடியோவொன்று வெளியானதால் சர்ச்சைக்குள்ளானார்.
வீடியோவில் தோன்றும் யுவதி தானல்ல என ஆரம்பத்தில் மெலிஸா கிங் கூறினாலும் வீடியோவில் காணப்படுபவர் மெலிஸாதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் தனது அழகுராணி பட்டத்தை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating