வடமாகாண சபை உறுப்பினர்கள் மூவரின் காவல் வாபஸ்

Read Time:2 Minute, 2 Second

ananthi.004வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு, புதன்கிழமையுடன் (25) வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவது தொடர்பில் பொலிஸ் பாதுகாப்புப் பெற்ற உறுப்பினர்களுக்கு யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ், கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை உறுப்பினர்களாக பாலச்சந்திரன் கஜதீபன், சந்திரலிங்கம் சுகிர்தன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரே பொலிஸ் பாதுகாப்பினைப் பெற்றிருந்தனர். அவர்களின் பொலிஸ் பாதுகாப்பே வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் தெரிவிக்கையில்,

தங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பினை வழங்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அதனாலேயே உங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகின்றது. உங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வேண்டுமாயின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் அனுமதியைப் பெற்று பாதுகாப்பை பெற்றுக்கொள்ள டியும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கஜதீபன் தெரிவித்தார்.

இக் கடிதம் மேற்படி மூன்று மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அந்தந்த பொலிஸ் நிலையங்களினூடாக அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் 4.45 கோடியினை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்
Next post கணவனை கொன்று உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட பெண்