திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் 4.45 கோடியினை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்

Read Time:1 Minute, 35 Second

thirupathi-திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு ஒரே நாளில் பக்தர்கள் 4.45 கோடியினை (இந்திய ரூபாய்) உண்டியல் மூலம் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

உலகின் பணக்கார கடவுளாக போற்றப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு தினந்தோறும் பக்தர்கள் கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

சராசரியாக ஒரு நாளுக்கு 2.25 (இந்திய ரூபாய்) கோடி உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதாக தேவஸ்தானம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சனிக்கிழமை பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணம் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை எண்ணப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.4.45 கோடி பக்தர்கள் காணிக்கை செலுத்தியது தெரியவந்தது. இதில் சில பக்தர்கள் 1000 ரூபாய் கட்டுகளை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இதற்கு முன்பாக, கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி வைகுண்ட ஏகாதசி அன்று ஒரே நாளில் 4.25 கோடி உண்டியல் காணிக்கை வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் மறியல் நீடிப்பு
Next post வடமாகாண சபை உறுப்பினர்கள் மூவரின் காவல் வாபஸ்