லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக; இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை

Read Time:2 Minute, 32 Second

006eஇங்கிலாந்தில் தொழில் செய்து குடும்பத்துடன் இங்கு வசித்து வந்த இந்தியரான சஞ்சய் குமார் வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு வந்தார்.

அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிக்கிச்சை பெறுவதாக லண்டனில் உள்ள தனது மனைவிக்கு அவர் இமெயில் மூலம் தகவல் அளித்தார்.

பின்னர் மூளைக் காய்ச்சலால் அவர் இறந்து விட்டதாக சஞ்சய் குமாரின் இறப்புச் சான்றிதழ், இடுகாட்டு ரசீது ஆகியவற்றுடன் இங்கிலாந்தில் உள்ள பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அவரது மனைவி முறையீடு செய்தார்.

அந்த நிறுவனத்தில் தனது கணவர் கட்டி வந்த பிரீமியத்துக்கான இழப்பீட்டு தொகையான 1 கோடியே 15 லட்சம் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் ரூ.100 கோடி) வாரிசுதாரர் என்ற முறையில் தனக்கு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.இது தொடர்பாக விசாரணை நடத்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புலனாய்வு பிரிவினர் சஞ்சய் குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுவதும், இறந்ததாக குறிப்பிடப்பட்டதும் நாடகம் என்பதை கண்டுபிடித்தனர்.

இதற்கிடையில் வேறொரு பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம் மீண்டும் இங்கிலாந்துக்கு வந்த சஞ்சய் குமாரை கைது செய்த லண்டன் போலீசார், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி அஞ்சுவையும் கைது செய்து இருவர் மீதும் சவுத்வார்க் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக இறந்ததாக நாடகமாடி மோசடி செய்த குற்றவாளி சஞ்சய் குமாருக்கு இரண்டரை ஆண்டுகளும், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவிக்கு 5 மாதங்களும் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆஸியில் மற்றுமொரு இலங்கை அகதி தற்கொலை முயற்சி
Next post தல… தலதான்- அஜீத்துக்கு திரிஷா பாராட்டு