மகனின் இறுதிக் கிரியைகளை ஸ்கைப்பில் பார்த்த பெற்றோர்!

Read Time:2 Minute, 6 Second

002eஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற உயிரிழந்த மகனின் இறுதிக் கிரியைகளை ஸ்கைப் மூலம் பார்த்த பரிதாப சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சீமோன்பிள்ளை மற்றும் எலிசபெத் 1990 ஆம் ஆண்டு தங்கள் குடும்பத்தினருடன் வேலூர் மேல்மொணவூர் அகதிகள் முகாமுக்கு சென்றனர்.

இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். 2 ஆவது மகன் லியோசின் 30 வயது . இவர் கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கடல்மார்க்கமாக சென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்த நிலையில் கடந்த மாதம் முதலாம் திகதி காலையில் லியோசின் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்தியாவிலுள்ள லியோசினின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

அவுஸ்திரேலியாவில் சடலம் தொடர்பிலான விசாரணை முடிந்து லியோசினின் உடல் அங்குள்ள அவரது நண்பர்கள் மற்றும் மெல்போர்ன் நகரில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களிடம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைக்கப்பட்டது.

நேற்றைய தினம் லியோசினின் இறுதி சடங்கு இடம்பெற்றது.இந்தியாவில் உள்ள உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் நேற்யை தினம் முகாமில் இருந்தபடியே கணனியில் ஸ்கைப் தொழிநுட்பத்தின் மூலம் மகனின் இறுதி கிரியைகளை பார்த்து மன வேதனையுடன் கதறி அழுதனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுபலசேனா, ஞானசார தேரருக்கு ஆப்பு வைத்த பேஸ்புக்
Next post மரக்கட்டையில் நின்றவாறு 30 மைல் தூரம் பயணித்த நாய் பாதுகாப்பாக மீட்பு