இலங்கைத் தமிழரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க குடும்பத்தினருக்கு விசா மறுப்பு

Read Time:1 Minute, 54 Second

006oஆஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கைத் தமிழரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கு அவரது குடும்பத்தினருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழரான லியோர்சின் சீமான்பிள்ளை (29), தனக்கு நிரந்தர அடைக்கலம் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு தற்காலிக விசா வழங்கிய ஆஸ்திரேலிய அரசு, வேலை செய்ய உரிமம் வழங்கியது.

இதற்கிடையே தன்னை இலங்கைக்கு நாடு கடத்திவிடுவார்களோ என்ற பயத்தில் இருந்த சீமான்பிள்ளை கடந்த சில தினங்களுக்கு முன் தீக்குளித்து இறந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக விசா கேட்டு இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்தனர். ஆனால், ஆஸ்திரேலிய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.

குடும்பத்தினர் யாரும் இல்லாமலேயே அதிகாரிகள் முன்னிலையில், நாளை கீலாகில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவுக்கோ அல்லது இலங்கைக்கோ உடலை அனுப்ப விரும்புவதாக ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை மந்திரி கூறினார். ஆனால், இறுதிச்சடங்கை குறிவைத்து தாக்குதல் நடக்கலாம் என்ற பயத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் உடலை கொண்டு வர மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மங்காத்தா–2ல் விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க முயற்சி
Next post உத்திரப் பிரதேசத்தில் தொடரும் அவலம்; மரத்தில் தொங்கிய நிலையில் தம்பதியரின் சடலங்கள்