4 மாதம் குடும்பம் நடத்திவிட்டு கைகழுவிய கணவர்: வீட்டு முன்பு பெண் தர்ணா போராட்டம்

Read Time:4 Minute, 56 Second

006eமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது ராயப்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் கார்த்திகா (வயது24). இவர் ஆசிரியை பயிற்சி முடித்து விட்டு பி.ஏ. படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களது மகன் பாண்டியராஜன். இவர் சென்னையில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கார்த்திகாவும், பாண்டியராஜனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் சென்னை சென்று திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இவர்களது திருமணத்திற்கு பாண்டியராஜன் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கணவன்–மனைவியும் சுமார் 3 மாத காலம் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் பாண்டியராஜன் பெற்றோர் சென்னை சென்று மகனையும், கார்த்திகாவையும் சொந்த ஊர் அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் மகனை மட்டும் வீட்டுக்குள் அனுமதித்துவிட்டு கார்த்திகாவை உள்ளே வர அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.

இதனை தொடர்ந்து கார்த்திகா திருமங்கலம் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். கணவரை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தனது கணவர் தன்னை ஏமாற்றி விட்டதாக கார்த்திகா மனம் வருந்தினார்.

கணவரை கைபிடித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த கார்த்திகா இன்று காலை ராயப்பாளையம் வந்து கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்க சென்றார். இதனை அறிந்த பாண்டியராஜன் பெற்றோர் வீட்டை பூட்டிவிட்டு திடீரென்று மாயமாகி விட்டனர்.

இதனை தொடர்ந்து கார்த்திகா கணவர் வீட்டு முன்பு ஒரு பையுடன் தரையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதற்கிடையே கணவர் வீட்டு முன்பு பட்டதாரி பெண் ஒருவர் தர்ணா போராட்டம் நடத்திய தகவல் திருமங்கலம் போலீசாருக்கு தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று தர்ணா போராட்டம் நடத்திய கார்த்திகாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து கார்த்திகா நிருபர்களிடம் கூறியதாவது:–

நானும், பாண்டியராஜனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். பாண்டியராஜன் சென்னையில் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் சென்னையில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். சென்னையில் 4 மாதம் கணவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தேன். எங்கள் திருமணத்திற்கு கணவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும் எனது பெற்றோரும் எங்களது திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் எனது கணவர் பெற்றோரின் பேச்சை கேட்டு என்னை கைகழுவி விட்டார். அவருடன் குடும்பம் நடத்த பலமுறை கேட்டும் அவர் வரமறுத்துவிட்டார். இதனால் இன்று கணவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

கணவர் வீட்டு முன்பு பட்டதாரி பெண் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோமாவிலிருந்து மீண்டார் மைக்கல் ஷூமாக்கர்; வைத்தியசாலையிலிருந்தும் வெளியேறினார்..
Next post லண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம்.. இளம்பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு (படங்கள்)