ஜேர்மனிய கலாச்சார நிகழ்வில் புலிக்கொடி காட்டிய மூவர், நையப்புடைக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைப்பு!

Read Time:3 Minute, 26 Second

002vகடந்த 8.06.14 ஞாயிற்றுக்கிழமை பேர்லினில் இடம்பெற்ற கலாச்சார நிகழ்வொன்றில் மதுபோதையில் புலிக்கொடியுடன் நுழைந்து கலாட்டா செய்த மூவர் ஜேர்மனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, மேற்படி கலாச்சார நிகழ்வு வருடம்தோறும் பேர்லினில் இடம்பெற்று வருகின்றது. பேர்லினில் வாழ்கின்ற பல நாடுகளை சேர்ந்த மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

ஒவ்வொரு நாடுகளையும் சேர்ந்த மக்கள் தமது நாட்டு கலை கலாச்சார நிகழ்வுகளை அங்கு காட்சிப்படுத்துகின்றனர். காட்சிப்படுத்தல்கள் தரவரிசைப்படுத்தப் படுகின்றன.

இந்த தரவரிசைப்படுத்தலில் கடந்த 2012 ல் இலங்கை முதலாவது இடத்தையும் கடந்த வருடம் இரண்டாவது இடத்தையும் பெற்றிந்த நிலையில் இவ்வருடமும் இரண்டாம் இடத்தை தட்டிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையின் கலை கலாச்சாரா காட்சிப்படுத்தலை விமரிசையாக்க அங்கு பெருந்திரளான இலங்கையர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவர்களில் பலர் முன்னாள் புலி ஆதரவாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தமது சகாக்கள் இலங்கையின் தேசியக் கொடியின் கீழ் இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்வதை சகிக்க முடியாத புலித் பினாமிகள் இருவர் அங்கு புகுந்து கலாட்டா செய்ய முற்பட்டுள்ளனர்.

கலாட்டாகாரர்களிடம் புலிக்கொடி இருப்பதனை அவதானித்த இலங்கையர்கள் அவர்களை நையப்புடைத்துக் கொண்டிருக்கையில் அங்கு விரைந்த ஜேர்மனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட இயக்கமான புலிகளியக்கத்தின் கொடியினை கொண்டு காலச்சார நிகழ்வில் கலாட்ட செய்ய முற்பட்டவர்களை கைது செய்து சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் துருக்கியை சேர்ந்தவர் எனத் தெரிய வருகின்றது.

இன்று புலிக்கொடி சுமப்பதற்கு 10 பேர் சுயமாக முன்வராத நிலையில் பிற நாட்டினரை கூலிக்கு கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

புலிக்கொடியினை வைத்திருந்த துருக்கிய நபருக்கு அது தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் கொடி என்பது தெரியாமல் இருந்துள்ளதாகவும் அறியக் கிடைக்கின்றது.

நிகழ்வின் சில படங்களும், வீடியோவும்…..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குத்துச் சண்டை கற்கும் நமீதா
Next post காற்றில் பறந்த கவுன்.. மிச்சேல் ஒபாமாவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்..