முன்னாள் புலி உறுப்பினர் தப்பியோட்டம்..

Read Time:2 Minute, 6 Second

Escapeஅண்மையில் மடு பிரதேசத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளின் போது, புலிகளுடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் புலிகளால் புதைக்கப்பட்ட வெடிபொருட்களை கொண்டு வந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்யும் ஒருவர் என தெரியவந்துள்ளதாகவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கைதான சந்தேகநபர் வசமிருந்து டி.என்.டி வகை வெடி பொருட்கள் சுமார் 15 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த வியாபாரத்துடன் தொடர்புடைய, தப்பிச் சென்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் தப்பியோடிய சந்தேகநபர் விடுதலைப் புலிகளால் குண்டுகள் புதைக்கப்பட்ட இடங்கள் பற்றி அறிந்தவர் எனவும் கைதான சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தப்பிச் சென்ற சந்தேகநபரைக் கைதுசெய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அவர் பற்றிய தகவல் அறிந்தால் 0112 451 636 அல்லது 0112 451 634 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழைய காருக்கு மொடலான செக்ஸ் பொம்மை; ஈபே இணையத்தளத்தில் கவனத்தை ஈர்த்தது
Next post கராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23பேர் பலி