விடுதலை புலிகள் கருணாநிதிக்கு சொந்தம் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் அவரது நண்பர்கள் -ஜெயலலிதா காட்டமான தாக்கு
பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் எனக்கு உள்ளது. ஆனால் முதல்வர் கருணாநிதியை விடுதலை புலிகள் சொந்தம் கொண்டாடியுள்ளார்கள். பயங்கரவாதிகள், தீவிரவாதிகளுக்கு அவர் நண்பராக உள்ளார் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா காட்டமாக தாக்கியுள்ளார். அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று ஜெயலலிதா பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:_
கேள்வி:_ தி.மு.க. ஆட்சி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறதா?
பதில்:_ முதலாவதாக எனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை குறைத்தார்கள் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அதையெல்லாம் நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. என்னை சந்திக்க வருபவர்கள் எனது வீட்டில் முறையான பாதுகாப்பு இல்லாததை பார்த்து என்னிடமே அது பற்றி தெரிவித்தார்கள். என்ன உங்களுக்கு பாதுகாப்பே இல்லையே என்று அவர்கள் கேட்கிறார்கள்.
கேள்வி:_ உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று போலீஸ் டி.ஜி.பி கூறியிருக்கிறாரே?
பதில்:_ அரசு என்னசொல்ல சொல்கிறதோ அதனைத்தான் அவர் சொல்வார். எனது வீட்டுக்கு நீங்களே (நிருபர்கள்) வந்து பாருங்கள் எப்படிப்பட்ட பாதுகாப்பு இருக்கிறது என்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.
கேள்வி:_ முன்னாள் முதலமைச்சருக்கு என்ன பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டுமொ அந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்லதே?
பதில்:_முன்னாள் முதலமைச்சருடன் என்னை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. எனக்கு பயங்கரவாதிகள், தீவிரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் (கருணாநிதி) நண்பர். விடுதலைப்புலிகள் அவரை சொந்தம் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழர் மீட்பு படை ஆகிய அமைப்புகளை அவர் ஊக்குவித்தார். வீரப்பனுக்கு அவர் நெருங்கிய நண்பர். கருணாநிதிக்கு யாரிடம் இருந்து அச்சுறுத்தல் இருக்கிறது. அவருக்கு ஏன் தேசிய பாதுகாப்பு படை பாதுகாப்பு என்பது புரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால் பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் இரும்புக்கரம் கொண்டு நான் அடைக்கினேன். மக்கள் நலன் நாட்டு நலன் கருதி நான் உறுதியுடன் இந்த நடவடிக்கைகளை எடுத்தேன். உண்மையில் எனக்குத் தான் தீவிரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் இருக்கிறது எனவே என்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவது தவறு.
கேள்வி:_கவர்னர் பரனாலாவுக்கு பதவி நீடிப்பு தரப்பட்டிருக்கிறதே?
பதில்:_ இது எதிர்பார்த்த ஒன்றுதான்.
கேள்வி:_ கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்கும் சட்டம் கவர்னரிடம் உள்ளதே. அது என்ன ஆனது?
பதில்:_அது செத்துப்போனது மாதிரிதான்
கேள்வி:_ இதற்காகத்தான் கவர்னருக்கு பதவி நீடிப்பு தரப்பட்டிருக்கிறதா?
பதில்:_மக்கள் இதனை புரிந்துகொள்வார்கள்
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.