சுரேஷ் பிரேமச்சந்திரன் வீடியோ: மீடியாக்கள் சதி என்கிறார் புலிகளின் நெடியவன் அணி ஆதித்தன் மாஸ்ரர்..!
இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுத்தரவுள்ள (!) தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் தூண்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிங்கள போலீஸை மிரட்டிய வீடியோ தணிக்கை செய்யப்பட்டு மீடியாக்களில் வெளியானதில், சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் வெளிநாட்டுப் பிரிவு நெடியவன் படையணி செய்தி தொடர்பாளர் ஆதித்தன் மாஸ்டர் கூறுகையில், “சுரேஷ் பிரேமச்சந்திரனின் பேச்சை முழுமையாக வெளியிடாமல், தணிக்கை செய்து விட்டன மீடியாக்கள். சுரேஷ் ஆங்கிலத்தில் பேசிய காட்சிகள் முழுமையாக தணிக்கை செய்யப்பட்டு விட்டன.
ஐ.நா. சபை போன்ற இடங்களில் தமிழன் ஆங்கிலத்தில் பேசி உரிமை பெற வேண்டும் என்றால், தமிழனின் ஆங்கிலப் பேச்சை தணிக்கை செய்திருக்க கூடாது. இந்த விதத்தில் தமிழினத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன தமிழ் மீடியாக்கள்” என சாடியுள்ளார்.
(தமிழர் பிரதிநிதி பேசிய சொற்களை வெளியிட்டால் தான், தமிழினத்துக்கு தலைகுனிவு என்பது இந்த மாஸ்டருக்கு புரியவில்லை!)
இந்த விவகாரம் குறித்து, ஏற்கனவே சுரேஷ் பிரேமச்சந்திரனின் வீர சாகச வீடியோவுடன் வெளியிட்டிருந்தோம் (கீழே பார்க்கவும்). வீடியோ தணிக்கை செய்யப்பட்டு மீடியாக்களில் வெளியிடப்பட்டது என்பது உண்மைதான்.
காரணம், அதில் மாண்புமிகு ராஜதந்திரி சுரேஷ் எம்.பி. அவர்கள் பேசிய இன் சொற்களை பொது மீடியாக்களில் வெளியிட முடியாது.
ஏனென்றால், மீடியாக்களில் கௌரவமானவர்கள், மரியாதை தெரிந்தவர்கள் வாசகர்களாக உள்ளதால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சகஜமாக பேசும் அவ்வகை சொற்களை நாம் வெளியிட முடியாது.
இதில் மற்றொரு விஷயம்.
“சுரேஷ் ஆங்கிலத்தில் பேசிய காட்சிகள் முழுமையாக தணிக்கை செய்யப்பட்டு விட்டன” என மாஸ்டர் கூறியுள்ளார் அல்லவா?
ராஜதந்திரி சுரேஷ் ஆங்கிலத்தில் என்ன பேசினார்?
வில்லியம் சேக்ஷ்பியரின் பிரபல வரிகளான “Friends, Romans, countrymen, lend me your ears..” ரேஞ்சில் அண்ணன் அவர்கள் பேசவில்லை. அவர் தனக்கு தெரிந்த ஓரிரு சொற்களை மட்டுமே பேசினார்.
தற்போது இலங்கை தமிழர் பிரச்னை சர்வதேச அளவில் பேசப்படுவதால், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் பேசுவதற்காக ராஜதந்திரி சுரேஷ் அவர்கள் ஆங்கிலம் பழகி வருகிறார்.
அதையடுத்து, சமீபகாலமாக வெளியிடங்களில் அவர் ஓரிரு ஆங்கில சொற்களை பயன்படுத்தி பயிற்சி செய்வதும் வழக்கம்.
அந்த வகையில், முல்லைத்தீவில் நடந்த தகராறிலும் ஓரிரு ஆங்கில சொற்களை பயன்படுத்தியிருந்தார்.
‘Bas…’ என்று தொடங்கும் அந்த சொல்லையெல்லாம் தணிக்கை செய்யாமல் வெளியிட, நாமென்ன தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியா நடத்துகிறோம்? மீடியா நடத்துகிறோம் மாஸ்டர்.. மீடியா!
நாகரீகம் தெரிந்தவர்கள் வந்து போகும் இடம் அய்யா மீடியா!
சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்பு மண்டையன் கமாண்டோ படையணியின் சிறப்பு தளபதியாக இருந்தபோது, அவருக்கு கீழ் இளநிலை உறுப்பினராக இருந்த ஒருவரிடம் அண்ணனின் ஆங்கிலப் புலமை பற்றி கேட்டபோது, “தளபதி சுரேஷ் அவர்களுக்கு இப்போதுதான் ஆங்கிலம் தெரியும் என்றில்லை. அவர் முன்பு மண்டையன் படையணியில் தளபதியாக இருந்த போதும், ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தியுள்ளார்.
அப்போதெல்லாம் அவர், ‘Shoot’ ‘Kill’ போன்ற ஓரிரு ஆங்கில வார்த்தைகளில் உத்தரவிடுவதுதான் வழக்கம்.
இந்த வீடியோவில் தளபதி அவர்கள் பேசிய ‘Bas…’ என்று தொடங்கும் சொல் அவருக்கு அப்போது தெரியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தபின், அக்கட்சியினர் சொல்லிக் கொடுத்திருக்கலாம். அக்கட்சியில் படித்தவர்கள், வக்கீல்கள் உள்ளார்களே” என்றார்.
எப்படியோ, வாசகர்கள் நலன் கருதி, தளபதி பேசியவற்றை முழுமையாக வெளியிட முடியாது என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதனால், அண்ணன் அவர்கள் பேசிய, “டேய்”, “வெளியே வா உதைப்பேன்” ஆகிய ‘மைல்ட்’ ஆன வார்த்தைகளை மட்டும் அனுமதித்து, மீதியை தணிக்கை செய்துள்ளோம்.
மீதி வார்த்தைகளை கேட்க வேண்டுமானால், அருகில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தை நாடவும்.
–விறுவிறுப்பு–
Average Rating