பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

Read Time:1 Minute, 42 Second

rajiv-perariovaalanஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைதண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பேரறிவாளன் தனது உடல் முழுவதும் பொது பரிசோதனை செய்ய வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், இதற்கான அனுமதியை புதன்கிழமை பெற்றார்.

இதைத் தொடர்ந்து, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.35 மணிக்கு பேரறிவாளனை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் பேரறிவாளனுக்கு ரத்த அழுத்தம், இ.சி.ஜி. ஆகிய பரிசோதனை செய்தனர். இந்த மருத்துவ பரிசோதனை முடிந்ததும் உடனடியாக பேரறிவாளனை சிறைக்கு அழைத்து வந்தனர்.

காலை 8.15 மணிக்கு பேரறிவாளன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குவைத்தில் கொலைச் சம்பவம்; இலங்கைப் பெண் கைது
Next post மகளின் சாவுக்கு நீதி வேண்டும் – கொன்சலிற்றாவின் பெற்றோர் போராட்டம்