(படங்கள்) “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” அனுசரணையில் வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு உதவிய, சுவிஸ் வாழ் திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் குடும்பத்தினர்..!
புங்குடுதீவை பிறப்பிடமாகவும், வட்டகச்சியை வசிப்பிடமாகவும் சுவிஸ்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்வி பரஞ்சோதி செல்வநிதி அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சகோதரி திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் அவர்களின் குடும்பத்தினர், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் அனுசரணையில் வவுனியா, விளக்குவைத்த குளம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா புதியவேலர் சின்னக்குளம் ஆனந்தகுமாரசாமி வித்தியாலயம், வவுனியா றம்பைக்குளம் நடராஜா வித்தியாலயம், வவுனியா விளாத்திக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளின் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தேவையான “கற்றல் உபகரணங்கள்” வழங்கி வைக்கப் பட்டது. 01.06 ஞாயிற்றுக்கிழமை விளக்குவைத்தகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வைத்து இக் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
யுத்தம் காரணமாக இடம்பெயாந்து தற்போது மீள்குடியேறி ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் பல்வேறு பிரச்சனைகளை பொருளாதார ரீதியில் எதிர்கொண்ட 52 குடும்பங்களைச் சேர்ந்த 52 மாணவர்களுக்கு இக் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகரும் , புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபை முன்னாள் உபதலைவருமான சந்திரகுலசிங்கம் (மோகன்), புளொட் முக்கியஸ்தர் திரு.மு.கண்ணதாசன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினருமான ஜோர்ஜ் வொசிங்டன், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்), கோயில்குளம் இளைஞர் கழக செயலாளர் ஜனார்த்தனன், கோயில்குள இளைஞர் கழக இணைப்பாளர் காண்டீபன், தொழில்நுட்ப இயக்குனர் சதீஸ், மகிழங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சி.கோபாலசிங்கள், மகிழங்குளம் பெண்கள் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் கோ.சரஸ்வதி, மகிழங்குளம் சனசமூக நிலைய பொருளாளர் தி,சோதிநாதன், சமூக சேவையாளர் கேதீஸ் உட்பட மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய சந்திரகுலசிங்கம் (மோகன்), அவர்கள் கூறிய போது, “கல்வி என்பது இன்று மிக மிக முக்கியமானதாக மாறிவிட்டது. மாணவர்கள் கல்வி கற்பதற்கு முடிந்தளவு பெற்றோர் போதிக்க வேண்டும். இன்று எமது புலம்பெயர் உறவுகள் கல்விக்காக பல உதவிகளை செய்கிறார்கள். அதனை நாம் பயன்படுத்தி நல்ல பெறுபேற்றை பெற்று உயர்நிலை பெறுவதன் மூலமே நாம் அவர்களுக்கு நன்றி கூற முடியும். இங்கு பல மாணவர்கள் வெள்ளை சீருடை கூட சீராக இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி படிக்க வேண்டும் என்ற ஊக்கம் இருக்கிறது பாராட்டபட வேண்டிய விடயம். எனவே பெற்றோர், ஆசிரியர்கள் இந்த மாணவர் சமுதாயத்தை நல்ல வழியில் செல்ல வழிகாட்ட வேண்டும்” என்றார்.
இதேவேளை, இங்கு உரையாற்றிய பலரும் இவ்வுதவியை வழங்கிய புலம்பெயர் (சுவிஸ்) வாழ் திருமதி.சிவநிதி பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவரது குடும்பத்துக்கும், இதை ஏற்பாடு செய்து தந்த “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்துக்கும்” தமது நன்றியை கூறியதுடன் இவ்வாறான உதவிகளை தமது கிராமத்திற்கு தொடர்ந்தும் வழங்கி உதவவேண்டும் எனவும் கோரிக்கை விட்டனர்.
புங்குடுதீவு & வட்டக்கச்சியையும் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்டு அமரத்துவம் அடைந்த “செல்வி. பரஞ்சோதி செல்வநிதி” அவர்களின் ஓராண்டு நினைவை முன்னிட்டு அவரது சகோதரி திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் அவர்களின் குடும்பத்தினரால் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் இந்த உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
–வவுனியாவில் இருந்து கரிகாலன்..
Average Rating