பெண்ணின் கைப்பையைத் திருடியவர் பேஸ்புக்கில் அகப்பட்டார்: அமெரிக்காவில் சம்பவம்

Read Time:1 Minute, 33 Second

facebook1அமெரிக்காவில் பெண்ணின் கைப்பையைத் திருடியவர், அந்தப் பெண்ணுக்கு பேஸ்புக் மூலம் நண்பராகி, அந்தப் பெண்ணால் அடையாளம் காணப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

படகு நிலையம் ஒன்றில் ஒரு பெண்ணிடம் இருந்து ரிலி முல்லின்ஸ் (28) என்பவர் கைப்பையைத் திருடிச் சென்றுள்ளார்.

சில நாட்களில் அந்தப் பெண்ணுக்கு பேஸ்புக் மூலம் நண்பராகியுள்ளார்.

அவருடைய பேஸ்புக் பக்கத்தில் அவரது கையில் முக்கோண வடிவிலான டாட்டூ (வுயவவழழ) குத்தியிருக்கும் படம் இருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தன் கைப்பையைத் திருடியவ நபர் அவர் தான் என்று அடையாளம் கண்டுள்ளார்.

இது தொடர்பாக அந்தப் பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

‘என்னுடைய பர்ஸில் இருந்த அடையாள அட்டையை வைத்து அந்தத் திருடன் எனக்கு பேஸ்புக் மூலம் நண்பராகி இருக் கிறான்,’ என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) 52 ஆயிரம் பேர் ஒன்றாக காலை உணவு உண்டு கின்னஸ் உலக சாதனை
Next post பேஸ்புக், டுவிட்டர் மூலம் உலக மக்களின் போட்டோக்களை திரட்டுகிறது, அமெரிக்க உளவுதுறை