(PHOTOS) 52 ஆயிரம் பேர் ஒன்றாக காலை உணவு உண்டு கின்னஸ் உலக சாதனை

Read Time:1 Minute, 33 Second

56791
அதிகளவானோர் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து காலை உணவு உண்டு புதிய உலக சாதனை துருக்கியினால் படைக்கப்பட்டுள்ளது.

இச்சாதனை நேற்று முன்தினம் துருக்கியின் வேன் மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் வணிக சபை ஒழுங்குசெய்த இந்த உலக சாதனை நிகழ்வில் 51,793 பேர் கலந்துகொண்டு மகிழ்வுற்றுள்ளனர்.

இதற்காக திறந்தவெளியில் 25 ஆயிரம் கதிரைகளும் 6 ஆயிரம் மேசைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேசையில் இடம் கிடைக்காதவர்கள் தரையில் அமர்ந்து உணவு உட்கொண்டுள்ளனர்.

56792
காலை உணவிற்கு முன்னர் இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் ஆட்டம் பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கின்னஸ் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நிகழ்வினை அவதானித்துள்ளனர்.

இதற்கு முன்னர் அமெரிக்காவில் ஒன்றாக 18,941 பேர் கலந்துகொண்டு காலை உணவு உண்டதே சாதனையாகவுள்ளது.

இதனை துருக்கி முறியடித்துள்ளதாக கின்னஸ் அமைப்பின் துருக்கி பிரதிநிதியான செய்தா சுபாஸி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடத்தப்பட்ட பாதிரியார், இலங்கை அகதிகளுக்கும் உதவியவர் -தந்தை
Next post பெண்ணின் கைப்பையைத் திருடியவர் பேஸ்புக்கில் அகப்பட்டார்: அமெரிக்காவில் சம்பவம்