பதவியேற்பு விழா: சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்தேன்: மோடி

Read Time:2 Minute, 23 Second

mahi.modiதனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வியம் செய்த மோடி, அங்கு கூடியிருந்த கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பேசும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ள மோடி, மக்கள் எனது அரசிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது எனது அரசின் கடமை. நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம். அதன் விளைவாக, இந்தியாவுக்கான மரியாதையையும் அந்தஸ்தையும் உலகம் அளிக்கும் என்றார்.

எனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். இதன் மூலம் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு தகவலை அளித்தோம். இது எப்படி நடந்தது என்று உலக நாடுகள் அதுகுறித்து இன்னமும் பேசி வருகின்றன. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு சரியான முடிவு எவ்வளவு திறன்வாய்ந்ததாக இருக்கும் என்பதையே இது காட்டுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சி காரணமாக மக்கள் நீண்ட காலமாக அதிருப்தி அடைந்திருந்தனர். மாற்று அணி அனுபவமும் உரிய பயனளிக்கவில்லை. இந்நிலையில், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கூடுதல் பொறுப்பு எனது அரசுக்கு இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி: கொலையா? தற்கொலையா?
Next post முல்லைத்தீவில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு