(PHOTOS) 5 வயது சிறுவனின் இறுதிக் கிரியைகளை நடத்திய சுப்பர் ஹீரோக்கள்

Read Time:2 Minute, 1 Second

5648_newsthumb_Thumபுற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 5 வயதான அமெரிக்க சிறுவனின் இறுதியைக் கிரியைகளை அவனுக்கு பிடித்த சுப்பர் ஹீரோக்கள் நடத்தி வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தைச் சேர்ந்த 5 வயதான பிரேடன் டென்டென் என்ற சிறுவன் கடந்த 13 மாதங்களாக மூளைப் புற்றுநோய் கட்டியுடன் போராடி வந்தான். இந்நிலையில் கடந்த வாரம் பிரேடன் உயிரிழந்தான்.

சுப்பர் ஹீரோக்களின் தீவிர ரசிகனாக இருந்த பிரேடனுக்காக அவனது உறவினர் சுப்பர் ஹீரோக்கள் போன்று உடையணிந்து அவனது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர்.

அவன் மிகத் தீவிரமான ஸ்பைடர் மேன் ரசிகனாக இருந்தான். அத்துடன் ஏனைய அனைத்து சுப்பர் ஹீரோக்களையும் விரும்பினான் என பிரேடனின் தாய் ஸ்டாசி டென்டென் கூறியுள்ளார்.

ஸ்பைடர் மேன், தோர், பெட்மேன், ஆயன்மேன், ஹல்க் போன்ற சுப்பர் ஹீரோக்களின் தோற்றத்தில் பிரேடின் உறவினர்கள் அவனது இறுதிக் கிரியை மேற்கொள்ளவே பிரேடனின் தாயும் விரும்பியுள்ளார். ‘இது கடினமாக இருந்தாலும் பிரேடனுக்காக செய்தோம்’ எனவும் ஸ்டாசி தெரிவித்துள்ளார்.

பிரேடனின் மூளைக் கட்டி ஆராய்ச்சிக்காக கொடுத்துள்ளதுடன் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஸ்டாசி ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

56482

56483

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஸ்லாமியத்தை தழுவிய மற்றுமொரு பிரபலம்!
Next post கோச்சடையானால் கோபமான தீபிகா படுகோன்!