மனைவியை கௌரவக் கொலை செய்த போது, பொலிஸார் தடுக்கவில்லை; கணவர் ஆவேசம்..

Read Time:2 Minute, 12 Second

003pபாகிஸ்தானின் லாஹூர் நகரில், குடும்பத்தினரால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் கணவர், தாக்குதல் நடந்த போது, பார்த்துக் கொண்டிருந்த பொலிஸார் தாக்குதலைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்

எதிர்பிற்கு மத்தியில் காதல் திருமணம் செய்து கொண்ட இந்தப் பெண் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்தப் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை லாஹூர் உயர்நீதிமன்றத்திற்கு வந்த பர்ஹானா பர்வீன் என்ற இந்தப் பெண்ணை, அவரது தந்தையும் சகோதரரர்களும் சில உறவினர்களும் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கல்லால் தாக்கிக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தப் பெண்ணின் கணவர் முஹமது இக்பால், இது குறித்து குறிப்பிடுகையில், இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தபோது அங்கிருந்த பொலிஸார்’ பலமுறை தான் உரக்கக் கூச்சலிட்ட போதும், இந்தத் தாக்குதலைத் தடுக்காமல், மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர், இது மனிதத் தன்மையற்ற அவமானகரமான செயல் என தெரிவிததுள்ளார்.

பாகிஸ்தானில் குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் பெண்கள் காதல் திருமணம் செய்து கொள்ளும் போது, அதனால் குடும்ப ‘கௌரவம்’ பாதிக்கப்படுவதாகக் கூறி நூற்றுக்கணக்கான பெண்கள் ஒவவொரு ஆண்டும் கொலை செய்யப்படுகின்றனர்.

இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாஸ்போர்ட்டில் படங்கள் வரைந்த மகன்; நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தந்தை
Next post வெளிநாடுகளில் விடுதலை புலிகள், மற்றும் இயக்க தொடர்பாளர்கள் கைது பின்னணி இதோ..