யார் அந்த மரியம் ஷரீப்?… ஏன் எல்லோரும் மோடி பதவியேற்பு விழாவுக்கு அவரை எதிர்பார்க்கிறார்கள்..

Read Time:3 Minute, 14 Second

25-maryam-sharif-600-jpgமோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்பை விட மரியம் ஷெரீப் என்பவரின் வருகைதான் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.

இந்த மரியம் ஷெரீப், நவாஸின் மகள் ஆவார். ஆனால் அவர் பதவியேற்புக்கு வரவில்லையாம். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அழைப்பை ஏற்று நவாஸ் ஷரீப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திங்கட்கிழமை காலை டெல்லிக்கு வருகிறார்.

அவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதோடு மட்டும் அல்லாமல் வரும் செவ்வாய்க்கிழமை இருநாட்டு உறவுகள் குறித்து மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்நிலையில் ஷரீபின் முடிவை அவரது மகளும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகியுமான மரியம் நவாஸ் ஷரீப் பாராட்டியுள்ளார்.

இதையடுத்து மரியம் ஷெரீப் குறித்து டிவிட்டரிலும், பேஸ் புக் பக்கங்களிலும் செய்திகள் நிரம்பி வழியத் தொடங்கின. இதற்குக் காரணம், மரியம் டிவிட்டரில் எழுதிய எழுத்துக்கள்தான். இரு நாட்டு மக்களையும் மிகவும் கவர்ந்துள்ளது மரியத்தின் டிவிட். இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து மரியம் ட்விட்டரில் கூறுகையில்,

இந்தியாவும், பாகிஸ்தானும் ஏன் பழையவற்றை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும்? பழைய பகையை மறந்து உறவை புதிதாக துவங்க வேண்டும்.

இரண்டு நாடுகளும் ஏன் பிரிக்கப்பட்ட கொரியாவை போன்று இருக்க வேண்டும். மாறாக அவர்கள் ஏன் இணைக்கப்பட்ட ஐரோப்பா போன்று இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படும் என்று மரியம் நம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஷரீபுடன் தற்போது மரியம் இந்தியாவுக்கு வரவில்லையாம்.

அதை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் ராணுவம், மரியத்தின் பேச்சையும், எழுத்தையும் ரசிக்காது என்ற காரணத்தால், மோடி பதவியேற்பு விழாவின்போது மரியத்தால் பாகிஸ்தானில் புது சர்ச்சை கிளம்பி விடக் கூடாது என்பதற்காக ஷரீப் அவரைக் கூட்டி வர விரும்பவில்லை என்று பேசிக் கொள்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாழடைந்த வீட்டில் யுவதி கற்பழித்து கொலை
Next post ராஜபக்சேவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ – மதிமுகவினருடன் கைது