ஜப்பானை வீழ்த்தியது: பிரேசில் 2-வது சுற்றில் கானாவுடன் 27-ந்தேதி மோதுகிறது

Read Time:3 Minute, 44 Second

Foot.Brasil1.jpgஉலக கோப்பை கால்பந்தில் `எப்’ பிரிவில் நேற்று நள்ளிரவு கடைசி லீக் ஆட்டங்கள் நடந்தது. இதன் ஒரு ஆட்டத்தில் பிரேசில்- ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 7 மற்றும் 20-வது நிமிடங்களில் பிரேசிலின் ரோனால்டினோ கொடுத்த பாசை முன்கள வீரரான ரொனால்டோ கோல் அடிக்க தவறினார். இந்த இரண்டு முயற்சியையும் ஜப்பான் கோல் கீப்பர் கவாகுச்சி அருமையாக தடுத்தார். 24-வது நிமிடத்தில் ஜப்பானின் அகிரா அடித்த ஷாட் கோலை நோக்கி சென்றது. ஆனால் இதை பிரேசிலின் கில்பெர்ட்டோ தடுத்து நிறுத்தினார். கடுமையான போராட்டத்திற்கு பின் 34-வது நிமிடத்தில் ஜப்பான் முதல் கோலை போட்டது. இந்த கோலை டமாடா அடித்தார். 45-வது நிமிடத்தில் ரோனால்டினோ கொடுத்த பாசை ராபின்நோ தலையால் முட்டினார். பந்து ரோனால்டோவிடம் சென்றது. அசுர வேகத்தில் துள்ளி அவரும் தனது தலையால் கோல் அடித்து அனைவரையும் வியக்க செய்தார்.

ஆட்ட முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல்கள் அடித்திருந்தன. 2-வது பாதியில் பிரேசில் ஆவசேகமாக ஆடியது. 53-வது நிமிடத்தில் ஜீனின்கோ 25 மீட்டர் தூரத்தில் ஷாட் முறையில் கோல் அடித்தார். அடுத்த 4 நிமிடத்தில் பிரேசில் மீண்டும் ஒரு கோல் போட்டது. இந்த கோலை கில்பர்ட்டோ அடித்தார்.

ரொனால்டினோ கொடுத்த பாசின் மூலம் இந்த கோலை கில்டர்ட்டோ அடித்தார். இது அவருக்கு கால்பந்தில் முதல் கோலாகும். பிரேசில் வீரர்களின் ஆக்ரோச ஆட்டத்திற்கு முன்பு ஜப்பான் வீரர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. அவர்களால் பதில் கோல் திருப்ப மிகவும் திணறினார்.

ஆட்டம் முடிய 9 நிமிடங்களே மிதமிருந்த நிலையில் ரோனால்டோ தனது 2-வது கோலை அடித்தார். இதை அவர் வலது கார்னரிலிருந்து மிகவும் சிறப்பான முறையில் கோல் அடித்தார். கடைசி வரை ஜபபான் வீரர்களால் ஒரு கோலுக்கு மேல் அடிக்க முடியவில்லை. முடிவில் பிரேசில் 4-1 என்ற கணக்கில் அபாரா வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பிரேசில் தான் மோதிய 3 லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் `எப்’ பிரிவில் முதலிடம் பிடித்தது. பிரேசில் 2-வது சுற்றில் `இ’ பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த கானாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வருகிற 27-ந்தேதி டாட்மண்டில் நடக்கிறது.

கானா அணி தற்போதுதான் உலக கோப்பைகளில் முதன் முறையாக பங்கேற்றுள்ளது. இதனால் பிரேசில் கால் இறுதிக்கு எளிதில் தகுதி பெற்று விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொழும்பில் தங்குமிடமொன்றின் உரிமையாளர் சுட்டுக் கொலை
Next post இந்தோனேஷியாவில் புயல் மழைக்கு பலி 460 ஆக உயர்வு