கிளாமருக்கு குறுக்கே அம்மா வருகிறாரா? துளசி பளிச்

Read Time:6 Minute, 15 Second

003gராதாவின் வாரிசுகள் கார்த்திகா, துளசி இருவரையும் திரையுலகம் பெரிதும் எதிர்பார்க்கிறது. அக்காவை எப்படியாவது முந்திச்செல்ல வேண்டும் என்ற வெறியெல்லாம் துளசியிடம் இல்லை. தேடி வந்த வாய்ப்புகளை ஒப்புக்கொண்டு நடித்து, அம்மாவுக்கு இருக்கும் நல்ல பெயரைக் கெடுக்காமல் இருந்தாலே போதும் என்கிறார். இப்போது ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கும் ‘யான்’ படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கிறார்.

‘யான்’ எப்படி கிடைச்சது?
‘கடல்’ படத்தில் என் பெர்ஃபாமன்சை பார்த்திருக்காங்க. ‘யான்’ கதைக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு டைரக்டர் சொன்னார். அம்மா கதை கேட்டாங்க. முதல்லயே பிரமிப்பு ஏற்பட்டது. கண்டிப்பா இந்தப் படத்தை தவறவிடக் கூடாது என்ற எண்ணம் வந்ததும், பத்தாம் வகுப்பு தேர்வைக் கூட பொருட்படுத்தாம நடிக்க ஒப்புக்கிட்டேன்.’

ராணுவ அதிகாரி மகளாமே?

படத்தில் நாசர் மகள் ஷீலாவா நடிக்கிறேன். பவர்ஃபுல் கேரக்டர். ஹீரோ ஜீவாவுக்கு நிகரா என் கேரக்டரும் இருக்கும். இதுவரை எந்த ஹீரோயினையும் இவ்வளவு அழகா, அம்சமா பாடல் காட்சிகளில் பார்த்திருக்க முடியாது. அப்படி விதவிதமான காஸ்டியூம்கள் போட்டுகிட்டு நடிச்சிருக்கேன். வெளிநாடுகளில் படமான பாடல் காட்சிகள் எல்லாமே ரசிகர்களுக்கு புதிய துளசியை அறிமுகம் செய்யும்.

ஜீவா?

ஏற்கனவே என் அக்கா கார்த்திகா அவருக்கு ஜோடியா ‘கோ’ படத்தில் நடிச்சார். அப்பவே ஜீவா பற்றி சொல்வார். ரொம்ப கம்ஃபர்ட்டபிளான நடிகர். ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய டிப்ஸ் கொடுத்தார். அது உதவியா இருந்தது. முதல்நாள் ஷூட்டிங்கில் அவர் கூட நடிச்ச எனக்கு படபடப்பா இருந்தது. காரணம், அவர் நிறைய படங்களில் ஹீரோவா நடிச்சவர். அவரோட எக்ஸ்பீரியன்சுக்கும் எனக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. எனக்கு இது இரண்டாவது படம். அந்த படபடப்பு வேற இருந்தது. ஆனா, அவர் கொடுத்த தைரியத்தில் போகப்போக உற்சாகமா நடிக்க ஆரம்பிச்சேன்.

‘கடல்’ ஹிட்டாகாதது வருத்தம்தானே?

அப்படி சொல்ல முடியாது. என் முதல் படமே எனக்கு பெரிய விலாசத்தை கொடுத்தது. ராதா மகள் என்ற பிளஸ் பாயின்ட் ஒருபுறம் இருந்தாலும், மணிரத்னம் அறிமுகம் செய்யும் ஹீரோயின் என்ற பெரிய சுமை என்மீது விழுந்தது. அவர் எதிர்பார்த்த மாதிரி நல்லா நடிச்சேன். அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த எந்த விஷயத்தையும் மறக்க முடியாது. வாழ்நாள் முழுக்க நினைச்சு, நினைச்சு ரசிச்சுகிட்டே இருக்கலாம். மணிரத்னம், கவுதம் கார்த்திக், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி ஒரே படத்தில் அமைந்த காம்பினேஷன்,
அவ்வளவு சுலபமா என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

கதைகள் கேட்பது அம்மாவா?

அம்மாவும் நானும் கேட்போம். ஆனா, இறுதி முடிவை நான்தான் எடுக்கணும்னு சொல்வார். சினிமாவில் அவருக்கு நிறைய அனுபவம் உண்டு. தனக்கு தெரிந்ததை எனக்கு சொல்வார். ஆனா, சுயமா முடிவு பண்ணி செயல்படணும்னு வலியுறுத்துவார். அந்த தன்னம்பிக்கையை எனக்கு சின்ன வயதில் இருந்தே வளர்த்து வந்தார். ஆனா, இப்ப அக்கா கார்த்திகாவும் எனக்கு உதவி பண்றார். மேக்கப், மேனரிசம், காஸ்டியூம், ஆக்டிங் இப்படி நிறைய விஷயங்களுக்கு அக்காவின் டிப்ஸ் கிடைச்சுகிட்டே இருக்கும்.

கிளாமரா நடிப்பது உங்க முடிவா?

ஆமா. கதை கேட்டவுடனே, அதில் என்ன பண்ணணும்னு முடிவாயிடும். எவ்வளவு தூரம் கிளாமரா நடிக்க முடியும்னு யோசிப்பேன். ‘கடல்’ படத்தில் வந்த முத்தக்காட்சியும் ஒரு எல்லைக்கு உட்பட்டுதான் இருக்கும். வலுக்கட்டாயமா வரும் கிளாமர் காட்சிகளை உடனே மறுத்துடுவேன். எனக்கும் சில பொறுப்புகள் இருக்கு. சினிமாவில் நடிப்பது ஒரு ஃபேஷன். அதையும் கடைசிவரை கண்ணியமா பண்ணணும்னு நினைக்கிறேன்.

அடுத்து என்ன படம்?

நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா, நான் 11ம் வகுப்பு தேர்வு எழுதிகிட்டிருக்கேன். ‘யான்’ ரிலீசான பிறகு சினிமாவில் எனக்குன்னு தனி இடம் கிடைக்கும். அந்த இமேஜை பயன்படுத்தி அடுத்தடுத்த படத்தில் நடிப்பேன். இப்ப என் கவனம் முழுக்க படிப்பு, எக்ஸாம் பற்றி மட்டுமே இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒருமுறை அம்மா வருவார். இன்னொரு முறை அப்பா வருவார். ஆனா, யாரும் என் நடிப்பு விஷயத்தில் தலையிட மாட்டாங்க.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூரை மீது நடனமாடியதற்காக கைது செய்யப்பட்ட 6 ஈரானியர்கள் ஜாமீனில் விடுதலை
Next post ஐந்து சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, 60 வயது நபர் கைது