வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ள வவுனியா மீனவ சங்க உறுப்பினர்கள்

Read Time:2 Minute, 17 Second

knife-arival(1)சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், அதனை தடுக்கச் சென்ற மீனவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்திய சந்தேக நபர்கள் தப்பியோடிய சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா நகர குளத்தில் பிரதேச மீனவ சங்கங்களில் பதிவு செய்தோர், குறித்த குளங்களில் மீன்பிடியில் ஈடுபடலாம். இவ்வாறு தம்மை பதிவு செய்துள்ள சிலர் குளத்தில் போடப்பட்ட மீன்களை இரவு நேரங்களில் திருடிச் சென்றுள்ளனர்.

அத்தோடு களவுத்தனமாக மீன்பிடியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்களை மடக்கிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மீனவ சங்க உறுப்பினர்கள் 15 ஆம் திகதி இரவு காத்திருந்துள்ளனர்.

இதன்போது மீன்களைத் திருடிய சந்தேக நபர்கள் தப்பிவிடவும் அவர்களை பின் தொடர்ந்து மீனவ சங்க உறுப்பினர்களும் துரத்திச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சர்வதேச சங்கங்கள் தம்மிடம் இருந்த வாளினால் மீனவ சங்க உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜமுஹைதீன், (45வயது) சதீஸ் காந்தன், (46வயது) ஆகிய இருவரும் வாள் வெட்டுக்கு இலக்காகி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாங்கள் மிகவும் சிரமத்தின் மத்தியில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது தமக்கு கவலை தருவதாக பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரவிகரன் மீது வழக்கு தள்ளுபடி
Next post அங்கங்களை படமெடுத்த விரிவுரையாளருக்கு விளக்கமறியல்