நியூயார்க்கில் சிகரெட் வாங்க குறைந்தபட்ச வயது 21

Read Time:2 Minute, 50 Second

smokingஅமெரிக்காவின் நியுயார்க் நகர மக்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை நடைமுறைப்படுத்த முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் தலைமையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள் ஒன்று மது அருந்துவதற்கான வயதை 21ஆக உயர்த்தியது ஆகும்.

இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி அவரது இரண்டாம் கட்ட பதவிக்காலம் முடிவடையும் முன் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதையும் 21ஆக புளூம்பெர்க் பரிந்துரை செய்திருந்தார். ஆறு மாதங்கள் காத்திருப்பில் இருந்த இந்த மசோதா தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இந்த புதிய உத்தரவுக்கேற்ப சிறு விற்பனை நிலையங்கள் அனைத்திலும் 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு சிகரெட் போன்றவை விற்கப்படமாட்டது என்ற அறிவிப்பு தற்போது காணப்படுகின்றது. சிகரெட் வாங்குபவர்களின் அடையாள அட்டைகள் சோதனையிடப்படுகின்றன.

விற்பனையாளர்கள் இந்த அடையாள அட்டைகளை ஸ்கேன் செய்து வயதை சரிபார்த்தபின்னரே சிகரெட்டை விற்பனை செய்கின்றனர். இதுமட்டுமின்றி, கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் சில தனிப்பட்ட கட்டிடங்கள் உட்பட உணவகங்கள், பார்கள், பூங்காக்கள், பொது சதுக்கங்கள் போன்ற இடங்களில் புகைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிகரெட்டிற்கான விற்பனை வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய உத்தரவால் அமெரிக்காவின் பெரிய நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 18 வயதுக்குட்பட்டவர்கள் சிகரெட், ஈ-சிகரெட், புகையிலை போன்றவற்றை வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய விதிமுறைகளால் இளைஞர்கள் புகை பிடிப்பதை முழுவதுமாகத் தடை செய்யமுடியாது என்ற கருத்து குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், இது சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள ஒரு நல்ல நடவடிக்கை என்று பாட் போனடைஸ் என்ற பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரேசில் சிறையில் 122 பார்வையாளர்களை சிறைபிடித்த கைதிகள்
Next post முஸ்லிம் வர்த்தகர்கள் மீது தாக்குதல் நடத்தியோர் கைது!