அதிக நேரம் தேனீக்களை உடலில் தாங்கி கின்னஸ் சாதனை!

Read Time:1 Minute, 57 Second

5497_newsthumb_Thumசீனாவைச் சேர்ந்த நபரொருவர் அதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ்  உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

62.1 கிலோ கிராம் தேனீக்களை உடலில் தாங்கி கின்னஸ் உலக சாதனை படைத்த ருவான் லியாங்மிங் என்பவரே இப்புதிய சாதனையையும் ஏற்படுத்தியுள்ளார்.

இவர் தனது உடலில் சுமார் ஒரு இலட்சம் தேனீக்களை 53 நிமிடங்கள் 34 விநாடிகளுக்கு போர்வையாக்கியுள்ளார்.

இதில் மிகப்பெரும் ஆச்சரியம் என்னவெனில் ஒரு தேனீ கூட அவருக்கு கொட்டவில்லை.


சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தின் யிசிங் நகரில் புதிதாக ஏற்படுத்திய தனது சாதனை குறித்து லியாமிங் பேசுகையில், ‘நான் தேனீக்களை விரும்புவதுடன் அவை என்னை விரும்புகிறேன். எனது தேனீ நண்பர்களால் மிக அரிதாகவே நான் கொட்டப்படுகிறேன். தேனீக்கள் மிகவும் உணர்வுமிக்கவை. எனவே என்னால் முடியுமானவரை என் மீது அவை நிலைகொள்ளும் வரையில் எனது உடலைப் பேணினேன். நான் தேனீக்களை விரும்புகிறேன். அவை எனது வாழ்க்கை’ எனத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீனாவைச் சேர்ந்த தேனி வளர்ப்பாளரான ஷீ பிங் என்பவர் தனது உடலில் 45 கிலோ கிராம் நிறையுடைய சுமார் 460,000 தேனீக்களை சுமந்து தனது தேனீக்கள் வியாபாரத்தினை அதிகரிக்க முயற்சித்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். திருநெல்வேலியில் விபத்து!!
Next post 15 அடி ஆழ குழிக்குள் வீழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்!