சின்னபண்டிவிரிச்சான் மினி சூறாவளியினால் அழிவுகள்..

Read Time:1 Minute, 31 Second

10330495_10203602368128918_8680206350831506138_n(1)மன்னார் சின்னப்பண்டிவிரிச்சான் மினி சூறாவளி அழிவுகளை வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.

சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில் கடந்த வாரம் வீசிய மினி சூறாவளியால் அப்பகுதி வாழ் மக்களின் வீட்டுக்கூரைகள் காற்று வீசி எறியப்பட்டதுடன் வாழைத்தோட்டங்களும் அழிவடைந்தன.

இது வரை எந்த அரச ஸ்தாபனங்களும் சம்மந்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளோ அரச அதிகாரிகளோ வந்து பார்வையிடவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்திருந்த நிலையில்

சம்பவ இடத்துக்கு அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு அழிவுகளையும் பார்வையிட்டனர்.

அத்தோடு இவர்களுக்கான இழப்பீடுகளை விரைவாக வழங்க அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காமசூத்ரா 3டி பட புகழ் ஷெர்லின் சோப்ரா, தமிழில் நடிக்கும் “பேட் கேர்ள்”
Next post சமையலில் அதிக வாசனை.. இந்தியர்களுக்கு வீடு கிடையாதாம்; சிங்கப்பூர் வீட்டுக்காரர்கள் அடாவடி!