இரட்டைத் தலை பாம்பு: இரு வாய்களாலும் உணவு உண்கிறது

Read Time:1 Minute, 46 Second

002rபாம்புகள் தங்களிடையே ஒன்றாக விளையாடமாட்டாது என்பதால் தனித்தனியாக பிரித்து வைத்தே பாம்புகளில் உரிமையாளர்கள் அதனை வளர்ப்பர். ஒன்றாக இருந்தால் ஒன்றை ஒன்று உண்டுவிடும், உணவுக்காக சண்டையிடும்.

ஆனால், ஒரே உடலில் இருபாம்புகள் இருந்தால் என்ன செய்வது? மெடுஸா எனப் பெயரிடப்பட்டுள்ள அல்பினோ ஹொன்டுரன் வகை பாம்பு ஒன்றுக்கு இரு தலைகள் உண்டு. அவை இரண்டும் சுதந்திரமாக சிந்தித்து அவற்றின் உடலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுடன் காணப்படுகிறது.

பிரிக்க முடிந்த இரட்டையர்களாக இந்த பாம்பு காணப்படுகிறது. இவ்வாறான பாம்புகள் வழக்கமாக நீண்ட காலம் வாழமாட்டாது. ஆனால் அவற்றினை முறையாக கவனமெடுத்து வளர்த்தால் சில காலம் பாதிப்பின்று வாழ வைக்க முடியும்.

இருப்பினும் மெடுஸா எனப்படும் இப்பெண் பாம்பினது இரு மூளைகளும் ஒன்றை ஒன்று புரிந்துகொள்கின்றன. ஏனெனில் உணவின்போது அவை இரண்டும் சண்டையிட்டுக்கொள்வதில்லை.

உடலுக்குத் தேவையான சத்துகள் பகிர்ந்துகொள்ளப்படுவதனால் இரு மூளைகளுக்குமான பசிக்குரிய சமிக்ஞைகள் ஒரே மாதிரியாக உள்ளதே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளை துஷ்பிரயோகம் செய்தவர் காட்டில் மறைந்த போது யானை தாக்கி மரணம்
Next post அங்கவீன யுவதி மீது பாலியல் வல்லுறவு; தொழிற்சாலை உரிமையாளருக்கு 7 வருட கடூழிய சிறை