யாழில் உலக நடன தின கொண்டாட்டம்

Read Time:1 Minute, 31 Second

0000088உலக நடன தினத்தை முன்னிட்டு கலை கலாச்சார அலுவல்கள் அமைச்சும் யாழ். மாவட்டச் செயலகமும் இணைந்து யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று உலக நடன தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுக்காலை 10 மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்வுக்கு கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

நிகழ்வில் நடன மாணவிகளின் நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மூத்த கலைஞர்கள் மூவருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

அத்துடன் ´இலக்கியம்´ என்ற நூல் ஒன்றினையும் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்கா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இணைந்து வெளியிட்டு வைத்தனர்.

இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், மற்றும் நடன துறை சார்ந்தோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணத்தில் புலிகளின் முன்னாள் போராளிகள்: பனைமரத்திலே வௌவாலா? புலிகளுக்கே சவாலா?? (கட்டுரை)
Next post வடக்கு பெண்கள் பலாத்காரம்: 17 இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக நடவடிக்கை