(PHOTOS) ஒரு ஆண், எத்தனை பெண்களையும் திருமணம் செய்ய அனுமதி; கென்யாவில் புதிய சட்டம்

Read Time:2 Minute, 38 Second

30-1398858412-kenya-polygamy-600-jpgஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் சட்டத்திற்கு கென்ய அதிபர் உ{ஹரு கென்யாட்டா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அங்கீகாரம்1ஃ5 அங்கீகாரம் கென்யாவில் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்கள் பலதார உறவு முறை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க முடிவு செய்த அரசு ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்ய அனுமதியளிக்கும் வகையிலான சட்ட மசோதாவை கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த மசோதா மீதான விவாதத்தில் ஆண் உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், பெண் எம்.பிக்கள் எதிராகவும் பேசினர். எதிர்ப்பையும் மீறி சட்டத்தை நிறைவேற்ற முயன்றதால் பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இச்சட்டத்துக்கு அதிபர் அங்கீகாரம் அளிக்க கூடாது என்று மகளிர் அமைப்பினரும், கிறிஸ்தவ பாதிரியார்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

30-1398858396-happy-polygamy-marriage-in-africa-600-jpgகுடும்பம் என்ற அமைப்பை சீர்குலைக்கும், முதலில் மணந்து கொண்ட மனைவி தெருவில் நிறுத்தப்படுவார் என்பது போன்ற கருத்துக்களை முன்வைத்து பெண்கள் அமைப்பினரும், கிறிஸ்தவ மதரீதியான கோட்பாடுக்கு எதிரானது என்று பாதிரியார்களும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் எதிர்ப்பை மீறி கென்ய அதிபர் உ{ஹரு கென்யாட்டா சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டுள்ளார்.

இச்சட்டப்படி முதல் மனைவியின் ஒப்புதல் கூட இல்லாமல் கணவனால் வேறு பெண்களை மணமுடிக்க இயலும். இச்சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தேசிய பெண் வழக்கறிஞர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரைகுறையாக மரணதண்டனை நிறைவேற்றம் நிறுத்தப்பட்ட கைதி, மாரடைப்புக்குள்ளாகி மரணம்
Next post மது விருந்தில் நிர்வாண நடனம்: நடிகை சன்னி லியோன் கைது ஆவாரா?