உலகின் முதலாவது மார்புக்கச்சை நூதனசாலையை, திறக்க தயாராகும் சீன நபர்

Read Time:1 Minute, 52 Second

52401சீனாவைச் சேர்ந்த நபரொருவர் உலகின் முதலாவது மார்புக்கச்சை (பிரா) நூதனசாலை ஒன்றினை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளார். சுகாதர ஊழியரான 45 வயதாகும் சென் குயிங்சு என்பவரே இந்த நூதனசாலையை ஆரம்பிக்கவுள்ளார்.

இவர் கடந்த இரு தசாப்தங்களாக சுமார் 5,000 மார்புக் கச்சைகளை சேகரித்துள்ளார். ஹினான் மாகாணத்தில் தனது மார்புக்கச்சை நூதனசாலையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள சென் தனது சேகரிப்பின் எண்ணிக்கைய இரு மடங்காக்கவுள்ளாராம்.

சுகாதார பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு கற்பிப்பதே எனது தொழில். ஆனால் பெண்களின் மார்புகள் தொடர்பான சுகாதாரத்துக்கு ஆலோசனை வழங்குவதே எனது விசேட ஆர்வமாகும். அதற்கு இதுவே (மார்புக்கச்சை நூதனசாலை) சரியாக வழியாக அமைந்தது’ என்கிறார் சென்.

இவர் சேகரித்துள்ள மார்ப்புக்கச்சைகளின் பெரும்பகுதி கல்லூரி மாணவிகளிடம் மார்பகம் தொடர்பாக அறிவுறுத்தி வாங்கப்பட்டதாம். இவரது முயற்சிக்கு நகரசபை உதவும் விதமாக இடம் ஒன்றினை வழங்க முன்வந்துள்ளது.

இந்த நூதனசாலை பெண்களின் மார்பகப் புற்றுநோய் மற்றும் மார்பகம் தொடர்பான சுகாதார விழிப்புணர்வினை ஏற்படுத்துவதாக அமையும் என நம்பிக்கை கூறியுள்ளார் சென்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாத்து தாக்கியதில் மணிக்கட்டு உடைந்தது… ரூ.1.5 கோடி நஷ்டஈடு கேட்கும் அமெரிக்க பாட்டி
Next post ரோபோவுடன் கால்பந்து விளையாடிய ஒபாமா