இந்தோனேஷியாவில் மழை வெள்ளத்துக்கு 114 பேர் பலி

Read Time:1 Minute, 57 Second

Indonesia.Map.jpgஇந்தோனேஷியாவில் 2 நாட்கள் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும் நிலச்சரிவில் உயிரோடு புதையுண்டும் 114 பேர் பலியாகி உள்ளனர். இந்தோனேஷியா சபிக்கப்பட்ட பூமி போலும்.கடந்த 2004-ம்ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமித்தாக்குதலில் பலர் பலியாகி இருந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பூகம்பங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டு உயிர்ப்பலி கொண்டு உள்ளன. இது தவிர எரிமலையும் நெருப்புக்குழம்புகளை கக்கி ஊரையே காலிசெய்ய வைத்துஉள்ளது.இது போதாது என்று இப்போது மழைவெள்ளமும் சேர்ந்து கொண்டு 114 உயிர்களைப்பலி கொண்டு உள்ளன

இந்தோனேஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் கடந்த 2 நாட்களாக பலத்தமழை பெய்தது.இதில் சின்ஜாய் பகுதி பலத்த சேதம் அடைந்தது.அங்கு திடீர் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது.

நிலச்சரிவில் பலர் உயிரோடு புதையுண்டனர்.இப்படி புதையுண்டவர்களை மீட்பதற்கான பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.வெள்ளத்தில் மூழ்கியும் நிலச்சரிவில் புதையுண்டும் 114 பேர் பலியானார்கள்.உயிர்ப்பலி எண்ணிக்கை உயரும் என்று கூறப்படுகிறது.

பலத்த மழையும் நிலச்சரிவும் இந்தோனேஷியாவில் அடிக்கடி ஏற்படுவதுதான். காடுகளை பெரும் அளவுக்கு அழித்து வருவதும் நிலச்சரிவு அதிகம் ஏற்படுவதற்கு காரணம் ஆகும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோல் ஏதும் அடிக்காமல் அர்ஜென்டினா-ஆலந்து ஆட்டம் `டிரா’வில் முடிந்தது
Next post ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது ஐவரி கோஸ்ட்