நியூசிலாந்தில் செத்த எலியை எடுத்துவரும் மாணவர்களுக்கு இலவச பீர்

Read Time:2 Minute, 9 Second

002mசர்வதேச அளவில் எலியால் தொல்லை இருந்து வருகிறது. பயிர்கள் பொருட்கள் மற்றும் உணவு தானியங்களை சேதப்படுத்துகின்றன. எனவே அவை விஷம் வைத்து அழிக்கப்படுகின்றன.

ஆனால் நியூசிலாந்தில் எலிகளை ஒழிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதாவது செத்த எலிகளை கொண்டு வரும் மாணவர்களுக்கு அதற்கு பதிலாக பண்டமாற்று முறையில் இலவச ‘பீர்’ வழங்கப்படுகிறது.

இதற்கான உத்தரவை வெல்லிங்டன் பல்கலைக் கழகத்தின் அறிவியல் சொசைட்டிதுறை பிறப்பித்துள்ளது. எலிகளை பிடிப்பதற்காக மாணவர்கள் அனைவருக்கும் எலிபொறி வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் தாங்கள் பிடித்த எலியுடன் வந்தால் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரில் இலவசமாக பீர் குடிக்கலாம்.

நியூசிலாந்தில் எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது. அவை பல்லிகளை கொன்று தின்று அழிகின்றன. மரங்களில் ஏறி பறவைகளின் முட்டைகளை உடைத்து குடிக்கின்றன. அதனால் அபூர்வ பறவைகளின் இனப்பெருக்கத்தால் தடை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பூர்வீக ‘வீட்டா’ என்ற பூச்சிகளை அவை தின்று அழிக்கின்றன. எனவே அவற்றை காப்பாற்றவே எலிகள் அழிப்பு தீவிரமாக நடக்கிறது. பூங்காக்கள் மற்றும் கால்வாய் மற்றும் ஏரி, குளங்களில் பொறிகள் வைக்கப்பட்டு எலிகள் பிடிக்கப்படுகின்றன.

ஆனால் வீடுகளில் பொறிகள் வைக்க முடியவில்லை. எனவேதான் இப்பணியில் மாணவர்களை ஈடுபடுத்த நூதனமுறை கடைபிடிக்கப்படுகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன்னை மனிதனென கருதும் நாய்
Next post பயங்கரவாத பொதுபல சேனா என்னை கொலை செய்ய காத்திருந்தது- விஜித தேரர்