இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட, இளைஞர் யுவதிகளுடன் ரவிகரன் சந்திப்பு

Read Time:2 Minute, 32 Second

image1(2)புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களில் மீண்டும் இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் சந்தித்து நிலமைகளைக் கேட்டறிந்துள்ளார்.

இது தொடர்பில் உறுப்பினர் கூறுகையில்,

புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர் யுவதிகள் மீண்டும் இராணுவத்தினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இதனால் அப்பகுதிகளில் நிலவிய பதட்ட சூழ்நிலையில் அன்றைய தினம் தொலைபேசி மூலம் தகவல்களை அவ்வப்போது பெற்றுக்கொண்டிருந்தாலும் மறு நாளே அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து மேற்படி விடயம் தொடர்பிலும் ஏனைய குறைகள் தொடர்பிலும் கலந்துரையாடினேன்.

தற்போது இடம்பெற்றுவரும் குழப்ப நிலைகளின் பின்னணியிலேயே அவர்கள் அழைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களுடன் குடும்ப அங்கத்தவர் இன்னொரும் அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

மேலும் குழப்பம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாதிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து மேற்படி பகுதிகளில் காணப்படும் குறைகள் தொடர்பில் ஆராய்ந்து அவை தொடர்பிலான தகவல்களையும் பெற்றுக்கொண்டேன்.

குறிப்பாக, நடைபெற்றுவரும் வீட்டுத்திட்ட நிர்மாணங்கள், வீதி புனரமைப்பு செயன்முறைகள் போன்றவற்றை பார்வையிட்டது மட்டுமல்லாது,

கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் தொடர்பிலான பிரச்சினைகளையும் மக்களுடன் கலந்துரையாடினேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தைக்கும், மகனுக்கும் தண்டம்
Next post 5 சிறுமிகளை வல்லுறவுக்கு உட்படுத்தியது தொடர்பில் ஆசிரியர் கைது