மூழ்கிய கப்பலில் இருந்து 60 சடலங்கள் மீட்பு: 250 மாணவர்களின் நிலை குறித்து கவலை

Read Time:2 Minute, 6 Second

20-south-korean-ship-accident-தென்கொரியாவில் கடலில் கவிழ்ந்த கப்பலின் உள்ளே சிக்கி உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுவரையில் 60 சடலங்களை மூழ்கித் தேடும் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

வலுவான நீரோட்டம் காரணமாகவும், நீர் கலங்கி பார்க்க முடியாமல் இருப்பதன் காரணமாகவும் இவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மூழ்கித் தேடும் மீட்புக் குழுவினரால் சனிக்கிழமை இரவு கப்பலில் பயணிகள் தங்கும் பகுதிகளுக்குள் முதல்தடவையாக நுழைய முடிந்திருந்தது.

பெரும்பாலும் பள்ளிக்கூட மாணவர்களாக சுமார் 250 பேரின் முடிவு இன்னும் உறுதிசெய்யப்படாமல் உள்ளது.

முன்னதாக கப்பலுக்குள் சிக்குண்டு முடிவு தெரியாமல் இருக்கும் நபர்களின் உறவினர்கள் சிலர் பொலிசாருடன் மோதியிருந்தனர்.

தேடுதல் பணிகள் மந்தமாக நடப்பதாகக் கூறி உறவுக்காரர்கள் ஆத்திரத்தை காட்டியபோது இந்த மோதல் ஏற்பட்டது

தமது அன்புக்குரியவர்களின் உடல்கள் விரைவாக கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.

கப்பலின் தலைமை மாலுமி தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

கப்பலை விட்டு பயணிகளை வெளியேற்றுவதா வேண்டாமா என்ற முடிவை தலைமை மாலுமிதான் எடுக்க வேண்டும் என கடலோரக் காவல்படையினர் கப்பல் கவிழ ஆரம்பித்த நேரத்தில் அறிவுறுத்தி இருந்தனர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நொறுக்கப்பட்ட கண்ணாடிகளின் மீது நின்று பல்லினால் 2,725 கி.கி வேனை இழுத்து சாகசம்
Next post ஆண் ஒட்டகத்தின் துணையின்றி குட்டி ஈன்ற பெண் ஒட்டகம்