மர்ம உறுப்பை வெட்டி, தற்கொலைக்கு முயன்ற பாப் பாடகர்

Read Time:1 Minute, 43 Second

3edee9a2-3117-47b8-83ed-fb02a8cdcbee_S_secvpfஅமெரிக்காவின் வடக்கு ஹாலிவுட் பகுதியில் வசித்து வரும் ஆண்ட்ரே ஜான்சன் (40) என்ற பாப் பாடகர் ‘கிறிஸ்ட் பேரர்’ என்ற பெயரில் இசைக்குழு ஒன்றில் பாடி வந்தார். இவர் கடந்த புதன்கிழமையன்று அதிகாலையில் தனது மர்ம உறுப்பை வெட்டிக்கொண்டு தான் வசிக்கும் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

படுகாயத்துடன் நடைபாதையில் கிடந்த ஜான்சனை காவல்துறை ஆம்புலன்சில் ஏற்றிச்சென்று செடார்-சினாய் மருத்துவ மையத்தில் சேர்த்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவில்லை. இதே குடியிருப்பில் இந்த இசைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர். மர்ம உறுப்பை வெட்டிக்கொண்ட ஜான்சன் யாரும் எதிர்பார்க்காத விதமாக வெளியே குதித்ததாக அவர்கள் கூறினர்.

அவர்கள் கீழே இறங்கிப் போவதற்குள் அவர் கத்திக்கொண்டே ஓடியதாகவும் அவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இவரது புதிய வீடியோ ஆல்பமான ‘ஊஹி’ வெளியான 24 மணி நேரத்திற்குள் அவர் இவ்வாறு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புனித வியாழன் வழிபாடு; 12 பேரின் காலை கழுவி, முத்தமிட்ட போப் ஆண்டவர்
Next post ஜெரோமி கொலை செய்யப்பட்டிருக்கலாமென பொலீசார் சந்தேகம்