தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கேணல் கருணா அவர்கள் அளித்த பேட்டி
இலங்கையில் எரிந்துகொண்டிருக்கும் இனப் பிரச்சனைக்கான நியாயமான தீர்வு குறித்தும், கிழக்கு மாகாணத்தில் நிலவும் இன்றைய நெருக்கடிகளுக்கு யார் காரணம்? என்பது குறித்தும் இப் பிரச்சனைகளைத் தீர்க்க தமது தலைமையில் இயங்கும் கட்சி எவ்வாறான கொள்கைகளைக் கொண்டிருக்கிறது என்பது பற்றிய பல விளக்கங்களை இலங்கையில் வெளியாகும் ஆங்கில வார இதழுக்கு அக் கட்சியின் தலைவரான கேணல் கருணா அவர்கள் விபரித்துள்ளார்.
இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு குறித்தும், தாம் தற்போது நடத்தி வரும் ஆயுதப் போராட்டத்தின் உள் நோக்கங்கள் குறித்தும் மிக விபரமான பதில்களை வழங்கியுள்ளார். கேணல் கருணா தலைமையிலான கட்சியின் நடவடிக்கைகளை ஒட்டுப் படைகள், துணைப் படைகள் என வர்ணித்து அவர்களை ஒடுக்க முயற்சிக்கும் இவ் வேளையில் அவரது கருத்துக்களை மக்கள் தெரிந்து கொள்வது மிக அவசியம் என்பதால் அதன் சுருக்கத்தின் தமிழாக்கத்தினை நாம் வழங்குகிறோம்.
கேள்வி:
அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே இடம்பெற்ற பேச்சு வார்த்ததைகள் உங்கள் குழுவினரின் ஆயுதங்கள் பறிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையால் இறுக்க நிலையை அடைந்துள்ளது. இந்த நிலை குறித்து நீங்கள் தரும் விளக்கம் என்ன?
பதில்:
அரசியல் ரீதியாகவும், மனித பண்பாட்டு அடிப்படையிலும் அமைய வேண்டிய நெறிகளை இழந்த ஓர் பாஷிஸ்ட் இயக்கமே புலிகளாகும். புலிகளின் பாஷிஸ்ட் கொடுமைகளிலிருந்து எமது மக்களை விடுவிக்கும் ஓர் அரசியல்-ராணுவ அமைப்பே எமது இயக்கமாகும். எம்மிடமுள்ள ஆயுதங்களை அரசு களைய வேண்டுமெனில் அதே முயற்சிகள் புலிகளின் ஆயுதங்களைக் களைவதிலும் எடுக்கப்பட வேண்டும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது நாம் புலிகள் அமைப்பில் இருந்தோம். எனவே எமக்கு ஒரு சட்டம், புலிகளுக்கு ஒரு சட்டமாக பேதம் காட்ட முடியாது. எமது பாதுகாப்பிற்காகவே நாம் ஆயுதங்களை வைத்திருக்கிறோம்.
கேள்வி:
பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இப் போட்டா போட்டியிலிருந்து சற்று ஒதுங்குவதாக அறிவித்தீர்கள். இருந்த போதிலும் உங்கள் தலைமையில் இயங்கும் போராளிகள் கிழக்கில் புலிகளுக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்துள்ளனர். நீங்கள் இந்த உண்மையை மறுக்க முடியாது. இதற்கு நீங்கள் தரும் பதில் என்ன?
பதில்:
நாம் எமது நிலைப்பாட்டை மிகவும் பகிரங்கமாகவே தெரிவித்து வருகிறோம். எமது பாதுகாப்பிற்காகவே நாம் ஆயுதங்களைப் பயன்படுத்துவோம். எமக்கு எதிராக எமக்குள் ஊடுருவி அல்லது வேறு எந்த வழிகளிலோ அல்லது பொட்டு அம்மானின் உளவுப் பிரிவு தாக்குமாயின் எமது பாதுகாப்புக் கருதி முன் எச்சரிக்கையின் நிமித்தம் நாம் நிலமைகளுக்கு ஏற்றவாறு செயற்படுவோம்.
கேள்வி:
அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளிருந்து நீங்கள் செயற்படுவதாக கூறப்படுகிறதே இது உண்மையா? அவ்வாறு இல்லை எனில் கட்டுப்பாடற்ற பிரதேசத்திற்குள் மட்டும்தான் செயற்படுகிறீர்களா?
பதில்:
இலங்கை ராணுவத்தின் எதிரிகள் நாங்கள் அல்ல. எனவே கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் செயற்படுவது எமக்குப் பிரச்சனையாக இல்லை. பொட்டு அம்மானின் உளவுப் படை மீதே எமது கண்காணிப்பு ஆகும். இது புலிகள் என்ற கொலை இயந்திரத்தின் மிகக் கொடுமையான பிரிவு ஆகும்.
கேள்வி:
அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உங்களின் நடமாட்டம் இருப்பதாகவும், ஒரு தடவை உங்கள் சகாக்கள் ஆயுதங்களுடன் நடமாடியதைத் தாம் கண்டதாக கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்களே உங்கள் பதில் என்ன?
பதில்:
புலிகளின் முகவர்களாகவே கண்காணிப்புக் குழு செயற்படுகிறது. எமது பத்திரிகை அறிக்கைகளை அவர்கள் படித்து எமது நோக்கங்களை அறிந்து கொள்ள வேண்டும். எமது அரசியல்- ராணுவ நோக்கங்களை ஒழிக்க அவர்கள் புலிகளுக்கு உதவுகின்றனர். புலிகள் தமது அரசியல் எதிரிகளை ஒழிப்பதையும், ராணுவத்தைத் தாக்குவதையும் இக் குழுவினர் மிகக் கவனமாகவே தவிர்த்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 3ம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையில் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கேணல் பானு, இளம் பரிதி, கரிகாலன் போன்றோர் போர்க் குற்றவாளிகள் எனவும், 90 களில் சுமார் 85000 முஸ்லீம்களை வடக்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் விரட்டியமைக்கு இவர்களே காரணம் எனவும், இவர்களைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளோம். சிங்கள ஆட்சியாளரின் ஒடுக்கு முறையிலிருந்து எம்மை விடுவிக்க இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. துர்அதிர்ஸ்ட வசமாக சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து மாறி புலிகளின் ஒடுக்கு முறைக்குள் மக்கள் வீழ்ந்துள்ளனர். புலிகளே மிகக் கொடுமையான ஒடுக்குமுறையாளர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கியால் மட்டுமே அவர்கள் தப்பிப் பிழைக்கின்றனர்.
புலிகளால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களின் அழுத்தத்திலிருந்து என்னை விடுவிக்கவே நான் அதிலிருந்து வெளியேறினேன். தமது பிள்ளைகளை இழந்த பெற்றோரின் அழு குரல்கள் என்னைத் துரத்தின. இன்னமும் துரத்துகின்றன. புலிகளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. நானும் மனிதன். இவை தொடர்பாக பிரபாகரன், பொட்டு அம்மான் போன்றோரை பலமுறை வற்புறுத்தினேன். தமது அதிகாரத்திற்கு ஆபத்து எனக் கருதியதோடு என்னை அவமானப்படுத்த முயற்சிக்கின்றனர். அதி;ஸ்ட வசமாக ஏனையோருக்கு நடந்த கதி எனக்கு நேரவில்லை. இது கடவுளின் செய்தி எனக் கருதி மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக் கருதி விலகினேன். அவர்களின் கண்ணீர் வீண் போகாது.
கேள்வி:
கண்காணிப்புக் குழு, நோர்வே அனுசரணையாளர்கள் ஆகியோரின் செயற்பாடுகள் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?
முன்னாள் கண்காணிப்புக் குழுத் தலைவர் புலிகளை சுதந்திரப் போராளிகள் எனவும், அவர்களை இலங்கை ராணுவம் வெல்ல முடியாது எனவும் கூறியுள்ளாரே!
பதில்:
இந்த இரு சாராரும் புலிகளின் கைகளிலேயே செயற்படுகின்றனர். தங்களுடைய செல்வாக்கிற்குள் புலிகளை வைத்திருக்க விரும்புவதால் அவர்களுக்காக இவர்கள் செயற்படுகின்றனர். புலிகளுக்கு நோர்வே பணம் வழங்கும் விவகாரம் பலரும் அறிந்ததாகும். அத்துடன் புலிகளின் இணையத் தளங்கள் செயற்படுவதற்கும் நோர்வே தளமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு புலிகளின் ஆதரவாளராக நோர்வே செயற்படுவதால் அது தனது மதிப்பை இழந்து வருகிறது. கடந்த நான்கு வருடங்களாக அமுலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மிக அதிக அளவு விகிதத்தில் மீறியவர்கள் புலிகளே. ஆயுதமற்ற ஜனநாயக சக்திகள் பலரைக் கடத்தினார்கள். இவர்களை விடுவிக்க உதவினார்களா? உதாரணமாக புளொட் இயக்கத்தின் வவுனியாவைச் சேர்ந்த பாரூக் என்பவர் அந்த அமைப்பின் அரசியல் வேலை செய்தவர். அவரைப் பட்டப் பகலில் கடத்தினார்கள். நு N னு டு கு அமைப்பின் செயலாளர் மனோ மாஸ்டர் கடத்தப்பட்டார். இப்போர் நிறுத்த காலத்தில் பல ஜனநாயக சக்திகள் பழிவாங்கப்பட்டார்கள். இதைத் தடுத்தார்களா? தற்போது எஞ்சியிருக்கும் ஆயுதம் தரித்த சிலரை தமக்கு இரையாக்க இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கின்றனர். புலிகளின் உத்தியோகபூர்வ உளவுப் பிரிவாக கண்காணிப்புக் குழு இயங்குவதாகவே கருத வேண்டியுள்ளது. ஏனெனில் தமது பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கும் எமது தோழர்களை அவர்கள் காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றனர். முன்னாள் கண்காணிப்புக் குழுத் தலைவர் அரசியல் கருத்துக்கள் தெரிவிப்பதைத் தடுத்திருக்க வேண்டும். அவர் மறுத்திருந்த போதிலும் அவர் மிக மோசமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளார்.
கண்காணிப்புக் குழுவினர் இலங்கை மக்களுக்கு எதிராக பக்கச் சார்பாகவே செயற்படுவதாக தெரிகிறது.
கேள்வி:
இலங்கை ராணுவத்தின் மறைமுக உதவி இல்லாமல் உங்கள் சகாக்களால் செயற்பட முடியாது என நம்புகிறேன். இல்லை எனில் நீங்கள் இரு பக்கத்திற்கும் இடையில் அகப்படுவீர்கள் இல்லையா?
பதில்:
இதனை முற்றாக மறுக்கிறேன். இலங்கை ராணுவத்தின் எதிரிகள் நாங்கள் அல்ல. இதன் அர்த்தம் அவர்களின் ஆதரவு எமக்கு உண்டு என்பதல்ல. பதிலாக புலிகளே எமக்கும் ராணுவத்திற்குமிடையே அகப்பட்டுள்ளனர். இந் நிலமையை மாற்றி தமது சர்வாதிகாரத்தை நீடிக்கவே அவர்கள் முயற்சிக்கின்றனர். ஒரு புறத்தில் ராணுவத்தைத் தினமும் கொலை செய்வதும் மறு புறத்தில் அவர்களைப் பயன்படுத்தி எமது ஆயுதங்களைப் பறிக்க முயற்சிப்பதும் கபடத்தனமான நோக்கங்களாகும்.
கேள்வி:
பழிக்குப் பழி தீர்க்கும் இப் போக்குகள் எங்கோ ஒரு புள்ளியில் நிறுத்தப்பட வேண்டும். எப்போ இது சாத்தியம்?
பதில்:
இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இது புலிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. பழிக்குப் பழி நடவடிக்கைகள் புலிகளின் கொலை வெறி தொடரும் வரை இது தொடரும். புலிகள் மத்தியிலே பெரும் வெறுப்பு நிலமைகள் ஏற்பட்டு வருவதாக எமது உளவுப் பிரிவுச் செய்திகளிலிருந்து தெரிய வருகிறது. இது புலிகளுக்குள் பெரும் பிரச்சனையாக எதிர்காலத்தில் அமையலாம்.
கேள்வி:
நீங்கள் உங்களின் பலம் நிறைந்த மட்டக்களப்பு பகுதியில் அரசியல் பிரிவை அமைத்து செயற்பட்டு வருகிறீர்கள். உண்மையில் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கப் போகிறீர்களா? அல்லது புலிகளிடையே பிளவை ஏற்படுத்த எடுக்கும் முயற்சியா?
பதில்:
எமது தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு ஓர் அரசியல்- ராணுவ அமைப்பு ஆகும். புலிகளைப் பிளவுபடுத்தும் நோக்கில் எமது கொள்கைகளை நாம் வகுக்கவில்லை. எமது சமுதாயத்ததை ஜனநாயகப்படுத்தி மக்களிடம் அதிகாரத்தை வழங்குவதே எமது அடிப்படை அணுகுமுறையாகும். பாஷிஸ்ட் புலிகளால் மறுக்கப்பட்டு சீர்குலைந்துள்ள நாளாந்த வாழ்வை சாதாரண நிலைக்குக் கொண்டுவருவதும், சமஷ்டி அடிப்படையிலான ஐக்கிய இலங்கைக்குள் பொருத்தமான தீர்வைக் காண்பதுமே எமது இறுதி நோக்கங்களாகும்.
கேள்வி:
புலிகள் உங்களை நடத்திய விதம் காரணமாக வெறுப்புற்று இருக்கிறீர்களா? பழிவாங்க முயற்சிக்கிறீர்களா? இது என்ன?
பதில்:
வெறுப்பு, பழிவாங்கல் என மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளீர்கள். இவற்றால் நான் என்றும் வழி நடத்தப்பட்டதில்லை. பழையனவற்றை மறந்து முன்னோக்கி நடைபோடுவதையே நான் என்றும் விரும்புபவன். என்னை ஒரு கெட்டவானாகக் காட்ட புலிகள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எனது மனத்தை உறுத்தியுள்ளன. மக்கள் என்றோ ஒருநாள் என்னைப்பற்றி உணர்வார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். எமது மக்களின் நல் வாழ்வை நோக்கிய முற்போக்குச் சிந்தனையே எமது போக்குகுளாகும். மிக முக்கியமான பல காரியங்கள் என் முன் உள்ளன. இருப்பினும் குறுகிய காலத்தில் பாரிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாம் பெற்றிருக்கிறோம். புலிகளுக்கு எதிரான எந்தவித ராணுவ நடவடிக்கைகளும் எமது பாதுகாப்புக் கருதி மேற்கொள்பவைகளாகும்.
கேள்வி:
தனித் தமிழீழம் என்பதை இன்னமும் நம்புகிறீர்களா? அல்லது நு P னு P கட்சியைப் போல ஐக்கிய அல்லது ஒற்றை ஆட்சிக்குள் தீர்வை நோக்கியதா?
பதில்:
உலகம் மிகவும் சுருங்கி கிராமம் போன்ற நிலைக்குச் சென்றுள்ளது. ஐக்கியம், இணைந்த வாழ்வு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாடுகள் நவீன உலகத்தின் போக்காக வளர்ந்து வருகின்றன. போர் மற்றும் வன்;முறையால் எமது மக்கள் சலித்து விட்டார்கள். கௌரவத்துடனும், சமாதானத்துடனும் மக்கள் வாழ விரும்புகிறார்கள். இன்னும் சற்று மேலே சொல்லப் போனால் இலங்கை என்ற தேசம் போர் என்ற அரசியலுக்கு அப்பால் மக்களை இணைத்து வாழும் அரசியலை நோக்கி மாற்றமடைந்து செல்கிறது.
நாம் ஐக்கிய இலங்கையை விரும்புகிறோம். இன்றைய பிரச்சினைக்கு சமஷ்டி வழியே தீர்வு எனக் கருதுகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நம்புகிறோம். இந் நாட்டில் வாழும் மக்களாகிய யாம் கௌரவத்துடனும், சம அந்தஸ்துடனும், அமைதியுடனும் வாழ விரும்புகிறோம். உலகம் முழுவதிலும் குறிப்பாக துணைக் கண்டமான இந்தியாவில் ஏற்பட்டு வரும் பொருளாதார வளர்ச்சியில் இலங்கையும் இணைக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம்.
பிரிவினை, விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் ஏற்பட்டுள்ள இம் முரண்பாடுகள் மிக அண்மையில் முடிவுக்கு வந்துள்ள ஒரு வரலாற்றை நாம் காண விரும்புகிறோம். இவ்வாறான மாற்றங்கள் சிங்கள மக்களின் விவேகமான முடிவுகளால்தான் அடைய முடியும் என நம்புகிறோம். ஓர் நவீன ஐக்கிய இலங்கையை நாம் உருவாக்க வேண்டுமெனில் சகல தரப்பாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாத்தியமான அணுகுமுறை மிக முக்கிமான மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் முற்போக்கான சிந்தனைகளால் உருவாக்கப்படும் சமஷ்டி அரசியல் அமைப்பு அவசியம் என்பதால் இம் மூன்று சமூகங்கள் இணைந்து ஓர் ஐக்கிய இலங்கைக்கான அடித்தளத்தைப் போட நாம் செயற்படுவோம்.
கேள்வி:
இந்தியாவைப் போன்ற சமஷ்டி அமைப்பா?
பதில்:
இது எவ்வாறு அமைய வேண்டும்? என்பது சமூகங்களின் இணக்கத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். இந்தியாவின் மாதிரி பொருத்தமான மாற்றங்களுடன் ஆரம்பிக்கலாம்.
கேள்வி:
சுதந்திரப் போராட்டத்தின் ஒரு தலைவராக இருந்தவர் என்ற வகையில் இப் போராட்டத்தில் எங்கு தவறு நேர்ந்தது? எனக் கூறுவீர்களா?
பதில்:
புல வகைகளில் தவறு நேர்ந்திருக்கிறது. இதில் முக்கிய அம்சம் புலிகள் அமைப்பு கொலைகளைச் செய்யும் யந்திரமாக மாற்றம் பெற்றுள்ளமையாகும். தேசிய விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் எந்த மக்கள் பாதுகாப்பு பெறுவார்கள் அல்லது அப் போராட்டம் எந்த மக்களில் தங்கியிருந்ததோ அந்த மக்களைப் படுகொலை செய்வதும், பாஷிஸ்ட் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதுமே முக்கிய அம்சங்களாகும். எமது மக்கள் மட்டுமல்ல, எமது கலாச்சாரம், மதம், கல்வி போன்றவற்றில் பெருமையடைந்திருந்த நிலை மாறி அவர்களின் வாழ்வு முறை புலிகளின் கோட்பாடுகளின் கைதியாக மாற்றம் பெற்றுள்ளமையுமாகும்.
கேள்வி;:
புலிகள் அமைப்பைக் கொலை யந்திரம் என்கிறீர்களே, கிழக்கு மாகாணத்தின் கமாண்டராக நீங்கள் செயற்பட்டபோது அவை அவ்வாறு இருக்கவில்லையா?
பதில்:
நான் இணைந்திருந்தபோதும் அது ஒரு கொலை யந்திரம்தான். நான் தேர்ச்சி பெற்ற போராளி என்பதால் அவ்வாறே செயற்பட்டேன். அப்பாவி மக்கள் மடிவதை பரிசோதிக்கவில்லை. இந்த யந்திரத்தின் கொலைகளின் எண்ணிக்கை தொடர்ந்து முடிவிலியை நோக்கிச் செல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சற்று முன்னதாகவே விலகியிருக்கலாம் என நான் எண்ணிக் கவலையுற்றதுண்டு. போர் நிறுத்த ஒப்பந்தம் எனது வெளியேற்றத்திற்கு வாய்ப்பாக அமைந்தது.
கேள்வி:
இவை குறித்து கவலைகள் உண்டா?
பதில்:
நிச்சயமாக இல்லை. இலங்கையில் நியாயமான சமூகம் உருவாக என்னால் ஆனதைச் செய்கிறேன். புலிகளின் பெரும் போலித்தனத்தை திருத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். முஸ்லீம் மக்களுக்கு இழைத்த பெரும் மனித நேய கொடுமைகளுக்கான குற்றவாளிகளை நீதி முன் நிறுத்த எமது தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் செயற்பட்டு வருகிறது. முஸ்லீம் மக்களின் சொத்துகளை அபகரித்துள்ளவர்கள் அச் சொத்துகளிலிருந்து எதிர்வரும் மே மாதம் 4ம் திகதிக்கு முன்னர் விலகிவிட வேண்டுமென காலக்கெடு விதித்துள்ளோம். அத்துடன் முஸ்லீம் மக்களின் வியாபார நிறுவனங்களை தற்போது வைத்திருப்போர் அதற்கான நஷ்ட ஈட்டுடன் வழங்கும்படி கோரியுள்ளோம். இந்த நீரில் நாம் தாழ்ந்தாலும் பரவாயில்லை நிறைவேற்றியே தீருவோம்.
கேள்வி:
கிழக்கின் இன்றைய நிலை குறித்து விளக்குவீர்களா? புலிகள்தான் அங்கு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை ஏற்றுக் கொள்வீர்களா? அவ்வாறு இல்லையெனில் விளக்குவீர்களா?
பதில்:
கிழக்கில் எமது கட்டுப்பாட்டை விஸ்தரித்து வருகிறோம். புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் எமது பலத்தை அதிகரித்து வருகிறோம். வெகு விரைவில் அவர்கள் தமது வெளியேற்றத்திற்கான பாதையை அறிவார்கள் என நம்புகிறேன்.
கேள்வி:
திருகோணமலையில் இடம்பெறும் சம்பவங்கள் குறிப்பாக அப் பகுதியின் தென்கிழக்கு நகரத்தினை ஈழத்தின் தலைநகராக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்:
புலிகள் தமது பழைய பாணியில் மக்களைக் கவசமாக்கி தமது வன்முறையைத் தொடர்கின்றனர். தமது தாயகக் கோட்பாட்டை நியாயப்படுத்த தமிழர் விரோத கலவரத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஈழம் என்பது கற்பனையில் காணும் வெள்ளை யானை. திருகோணமலை அதன் தலை நகர். தமிழர் மத்தியிலே மேலும் வரி வசூலிப்பதற்கான ஓர் முயற்சியே அதுவாகும்.
கேள்வி:
ஜெனீவா பேச்சுவார்த்தைகனிபோது நீங்கள் சிறுவர்களை இணைப்பதில் ஈடுபட்டதால்தான் வெளியேற்றப்பட்டதாக தமிழ்ச்செல்வன் கூறியிருப்பது பற்றி உங்கள் பதில் என்ன? இன்னமும் சிறுவர்கள் இணைக்கப்படுகிறார்களா?
பதில்:
தமிழ்ச் செல்வன் எப்போதும் எதையுமே தனது எஜமானின் குரலில்தான் பேசுவார். இன்று ஒன்றையும், மறுநாள் மற்றொன்றும் பேசுவார். சிறுவர்களைப் பிடிப்பதிலும், இணைப்பதிலும் புலிகள் மிகவும் தேர்ந்தவர்கள். என்னை அவமானப்படுத்த எடுத்துள்ள முயற்சியே இதுவாகும்.
கேள்வி:
கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் எதிர்காலமென்ன?
பதில்:
புலிகளின் கொடூரம் வாய்ந்த நிர்வாகத்திற்குள் அம் மக்கள் வாழ்கிறார்கள். சிறு குற்றங்கள் அது குடும்பப் பிர்ச்சனையானாலும் மிகக் கொடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. வடக்கில் சிறுவர்களை இணைப்பது கடினமடைய கிழக்கில் சிறுவர்களை இணைப்பது தீவிரமடைந்துள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு அவர்களது இம் முயற்சிக்கு பெரும் தடங்கலாக உள்ளது.
கேள்வி:
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நீங்கள் வழங்கும் செய்தி என்ன? அவருக்கு ஏதாவது சவால் விட எண்ணுகிறீர்களா?
பதில்:
புpரபாகரன் குழப்பங்கள் நிறைந்த ஓர் பைத்தியகாரர். மற்றவர்களைக் கொலை செய்வதன் மூலம் தனது துன்பத்தைத் தீர்த்துக் கொள்பவர். மக்கள் கொல்லப்பட்ட போது மகிழ்ந்து கொண்டாடிய சம்பவங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். தற்போது அவரது குணங்களில் மேலும் மாறுதல்கள் படிப்படியாக ஏற்பட்டு வருகின்றன. இவை உணவுப் பழக்கங்களால் ஏற்பட்ட உள மாற்றங்களாக இருக்கலாம்.இந்த மனிதனது தலைமையின் கீழ் எத்தனை மக்கள் மடிந்துள்ளார்கள்? என்பதை எண்ணிப் பாருங்கள். சுமார் 5000 பேர் இயக்கத்திற்குள் மிகவும் குரூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்கள். மிகவும் பாதுகாப்பு அரண்கள் கொண்ட பகுதியில் ‘ புனித பூமி ‘ எனப் பெயர் சூட்டி வாழ்கிறார். ஆயிரக் கணக்கானோரைப் படுகொலை செய்த இந்த மனிதன் தன்னை மக்கள் வழிபட வேண்டும் என்ற நோக்கில் புனிதபூமி என்ற நாமத்தைச் சூட்டி வாழ்கிறார்.
ஹேக் நகரில் அமைந்திருக்கும் சர்வதேச மனித உரிமை நீதி மன்றத்தில் விசாரணையை எதிர் நோக்கும் நாள் நெருங்கியுள்ளது. ஏனைய சர்வதேச குற்றவாளிகள் போல் இவர்களும் விசாரிக்கப்படுவார்கள். புத்திசாலித்தனமாக முடிவு செய்து இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கிறேன்.
Average Rating