உனக்கு 13… எனக்கு 12… மிகக் குறைந்த வயதில், பெற்றோரான காதலர்கள்!
லண்டன்: இங்கிலாந்து நாட்டின் மிக குறைந்த வயது பெற்றோர் என்றத் தகுதியை 12 வயது தாயும், 13 வயது தந்தையுமான தம்பதி பெற்றுள்ளது. சில சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்களது பெயர் வெளியிடப்படவில்லை.
இங்கிலாந்தின் வெவ்வேறு பள்ளி கூடங்களில் படித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த 2012ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சந்தித்து கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து காதலில் விழுந்த அவர்கள் தற்போது தம்பதிகளாகி விட்டதாக அந்நாட்டுப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், 11வயதில் கர்ப்பிணியான அச்சிறுமி கடந்த வாரம் பெண் குழந்தைக்கு தாயானதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த சிறுமி நேற்று தனது தாய் மற்றும் மற்றொரு பெண்ணுடன் சென்று பதிவாளர் அலுவலகத்தில் குழந்தை பிறப்பை பதிவு செய்ததன் மூலம் இந்தத் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குட்டிப்பாப்பா…
இதன் மூலம் இங்கிலாந்தில் மிக குறைந்த வயதில் தாயான ட்ரெசா மிடில்டனை விட தற்பொழுது தாயாகியுள்ள சிறுமி 5 மாதங்கள் இளையவள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், புதிதாக பிறந்த அக்குழந்தை 7 பவுண்டு எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
27 வயதில் பாட்டி….
12 வயதைக் கடந்து 3 மாதங்கள் ஆகியுள்ள இந்த சிறுமியின் தாய்க்கு வயது 27 தானாம். இதனால், அந்த தாயும் மிக குறைந்த வயதில் பாட்டியாகியுள்ளார்.
பள்ளிக்குத் தெரியாமல்…
பள்ளிக்கூடத்தில் படித்து வந்த சிறுமி குழந்தை பெறுவதற்கு ஒரு மாதம் முன்பாகவே பள்ளியில் இருந்து நின்றுள்ளாள். அதுவரை அவள் கர்ப்பிணி போன்று உடன் படித்தவர்களுக்கு தெரியவில்லை.
13 வயதில் பெற்றோரானவர்கள்… இதற்கு முன்னர் இங்கிலாந்தின் மிக குறைந்த வயது பெற்றோர் என்ற தகுதியை ஏப்ரல் வெப்ஸ்டர் மற்றும் நாதன் பிஷ்போர்ன் தம்பதியினர் பெற்றிருந்தனர். அவர்கள் தங்களது 13 வயதில் பெற்றோர் ஆனார்கள். அவர்கள் இருவரும் பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள்தான்.
குறைந்த வயதில் கர்ப்பம்…
சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த 1969ம் வருடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மிக குறைந்த அளவாக 15 முதல் 17 வயதிற்கு உட்பட்ட 1,000 பெண்களில் 27.9 பேர் கர்ப்பமாகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறைந்து வரும் எண்ணிக்கை…
கடந்த 2012ம் ஆண்டில் 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கர்ப்பிணி ஆவது 27,834 ஆக இருந்துள்ளது. இது அதற்கு முந்தைய 2011ம் ஆண்டில் 31,051 ஆக இருந்துள்ளது. இது 10 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோன்று, 16 வயதிற்குள் கர்ப்பமாவோரில் கடந்த 2012ம் ஆண்டில், 5,432 பேர் இருந்துள்ளனர்.
கர்ப்ப சதவீதம்…
இது அதற்கு முந்தைய 2011ம் ஆண்டில் 5,991 ஆக இருந்துள்ளனர். இது 9.3 சதவிகிதம் குறைவாகும். 16 வயதிற்கு உட்பட்டோரில், 3,251 பேர் தங்களது கர்ப்பத்தை கலைத்துள்ளனர். இது அவர்களின் கர்ப்ப சதவீதம் என எடுத்து கொண்டால் 59.8 சதவீதமாகும்.
கருக்கலைப்பு…
இது அதற்கு முந்தைய ஆண்டில் 60.2 சதவீதமாகவும் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் 62.5 சதவீதமாகவும் இருந்துள்ளது. மேலும், கடந்த 2012ம் ஆண்டில் 14 வயதிற்கு உட்பட்டோர் 253 பேர் கர்ப்பமாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் குறைவானதாகும். மேலும் அவர்களில் 3 பங்கினர் கர்ப்பத்தை கலைத்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating