வீட்டில் தனிமையிலிருந்த இளம்பெண்ணை முத்தமிட்டு, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் கைது!

Read Time:1 Minute, 33 Second

kissதிருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் 23 வயதுடைய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அப்துல் கபூர் துசான் (27) ஜாயா நகர்-குச்சவெளி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிய வருகின்றது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

தனிமையில் வீட்டில் இருக்கும் போது ஆடைகளை மாற்றிக்கொண்டிருந்த வேளை துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் யுவதியை முத்தம் இட்டதாக கூறியே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபர் துவிச்சக்கர வண்டியை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட நபரை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் திருநாவுக்கரசு திருச் செந்தில் நாதன் முன்னிலையில் ஆஜர் படுத்திய வேளை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெக்சிகோவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 25 பேர் பலி
Next post நடுவானத்தில் பறந்த போது, விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி