விஜயகாந்த் என்ன பேசுகிறார், என்பதே புரியவில்லை: சரத்குமார்

Read Time:5 Minute, 22 Second

ind.sarathkumar_25நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர். சுந்தரத்தை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மத்தியில் ஆளும் அரசு, மாநிலங்களுக்கு உரிய மதிப்பு கொடுக்க வேண்டும். அப்போது தான் நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையும். ஆனால் மத்திய காங்கிரஸ் அரசு இதனை செய்ய தவறிவிட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் ஆகும் போது இந்தியா பொருளாதாரத்தில் உயர்வு பெறும்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அளித்து இருந்த 177 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். அதற்கு அவர் தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுவதே காரணம் ஆகும். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசு எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.

இந்த தேர்தலில் தமிழகத்தில் பல கூட்டணிகள் உருவாகி உள்ளன. இதில் கடந்த 10 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க. பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டு தமிழகத்தை வஞ்சித்து விட்டது. மற்றொரு கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அந்த கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. மத்தியில் வீசும் ஒரு அலையில் நாம் வெற்றிபெறுவோம் என எண்ணிக் கொண்டு உள்ளது.

அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்பதே புரியவில்லை. தனது மைத்துனர் சுதீஷை மத்திய அமைச்சராக்கவும், அதே கூட்டணியில் உள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக்கவும் திட்டம் போட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் கூறும் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது.

இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. அவர்களை வழிநடத்த தகுதியான தலைமை தேவைப்படுகிறது. அதற்கு தகுதியானவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தான். எனவே ‘நாற்பதும் நமதே’ என்பது தான் நமது இலக்காக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. அனைத்து மக்களும் பயன்பெற பல நலத்திட்டங்களை செய்து பாராட்டு பெற்று வருகிறார். மின்சார உற்பத்தியில் இந்தியாவிலேயே அதிக மெகாவாட் உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

ஆனால் எதிர்க்கட்சியினர், மின் பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்கி அ.தி.மு.க. அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களது சதியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா விரைவில் முறியடிப்பார். நாட்டு மக்கள் நல்ல பல நன்மைகளை பெற்று வருகின்றனர். அந்த பயனை தொடர்ந்து மத்திய அரசு உதவியுடன் மேலும் பெற முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தரும் வகையில் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி, கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. பொறுப்பாளளர் சதன் பிரபாகர், நாமக்கல் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் சுரேஷ்காந்தி மற்றும் அ.தி.மு.க.வினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர் பள்ளி பாளையம் 4 ரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விநாயகம், நெடியவனைக் கைது செய்ய; சர்வதேச பொலிஸாரின் உதவி
Next post செக்ஸியாகவே நடிப்பேன் -ஷகீலா அடம்