மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது: ரஷ்ய உளவுத் துறை திடுக் தகவல்
மாயமான மலேசிய விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டு தனி தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய உளவுத் துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மாதம் 8ம் தேதி திடீரென காணாமல் போனது. அதில் 12 ஊழியர்கள் உள்பட 239 பயணிகள் இருந்தனர்.
இதையடுத்து விமானத்தை தேடும் பணியில், 26 நாடுகளின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டன.
கடலுக்கு அடியில் இருந்து விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வந்ததாக சீன அரசு தெரிவித்தது. உடனடியாக கறுப்பு பெட்டியை கண்டுபிடிக்க அமெரிக்கா வழங்கிய நவீன கருவி உதவியோடு தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏறக்குறைய அந்த இடத்தை நெருங்கிவிட்டதாக நேற்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், திடீர் திருப்பமாக விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாக ரஷ்ய உளவு துறை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய உளவுத் துறையினர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
மலேசிய விமானம் தீவிரவாதிகளால் திசை திருப்பப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையோரம் ஆப்கானிஸ்தான் பகுதியில் மலை பகுதிகள் நிறைந்த இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
அங்கு விமானத்தின் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரையும் 7 குழுக்களாக பிரித்து வேறு வேறு இடங்களில் அடைத்து வைத்துள்ளனர்.
மண் குடிசைகளில் எந்த தொலைதொடர்பு வசதியும் இல்லாத இடத்தில் பயணிகளை தீவிரவாதிகள் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் விமானத்தில் சென்றவர்களில் ஆசிய நாடுகளை சேர்ந்த பல்துறை நிபுணர்கள் 20 பேரை பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதுங்கு குழிகளில் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக அடைத்துள்ளனர்.
இவ்வாறு ரஷ்ய உளவு துறையினர் தெரிவித்துள்ளதாக டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
விமானம் மாயமாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகும் நிலையில், விமான பயணிகள் உயிருடன் இருப்பதாக ரஷ்ய உளவு துறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating