இத்தாலியில் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு கோர்ட்டு அனுமதி

Read Time:1 Minute, 36 Second

homo-001இத்தாலியில் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து ஓரினச்சேர்க்கையாளர்கள் போராடி வருகிறார்கள்.

இந்தநிலையில் இத்தாலியை சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களான ஸ்டெபனோ புக்கி (வயது 57) மற்றும் ஸ்டெபனோ சிகியோட்டி (68) ஆகிய இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இத்தாலிக்கு வந்த இவர்கள், தங்கள் திருமணத்தை பதிவு செய்வதற்காக அங்குள்ள அலுவலகத்தில் (டவுன்ஹால்) மனு செய்தனர். ஆனால் திருமணத்தை பதிவு செய்ய அந்த அலுவலகம் மறுத்து விட்டது. இதைத்தொடர்ந்து ஓரினச்சேர்க்கை தம்பதி, டஸ்கனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த நீதிபதிகள், ஓரினச்சேர்க்கை தம்பதியின் திருமணத்தை, பிற திருமணங்களைப்போல பதிவு செய்யுமாறு டவுன்ஹாலுக்கு உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பின் மூலம், இத்தாலியில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு புதிய அத்தியாயம் பிறந்துள்ளதாக ஓரினச்சேர்க்கை அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘கிஸ்’ அடிக்கும் போது, எந்த இடத்தைப் பிடிச்சிக்கனும் தெரியுமா…? (அவ்வப்போது கிளாமர்)
Next post பலவந்த திருமணம் செய்த நபரை, எலி நஞ்சை உணவில் கலந்து கொன்ற சிறுமி