பொது நிகழ்ச்சியில் ஹிலாரி கிளிண்டன் மீது ஷு வீச்சு: பெண் கைது

Read Time:2 Minute, 28 Second

usa.hilaryஅமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன். இவர் தற்போதைய அதிபர் ஒபாமா மந்திரி சபையில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார்.

தற்போது அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொற்பொழி வாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று லாஸ்வே காஸ் நகரில் நடந்த ஒரு நிறுவன விழாவில் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார்.

அதில், 1000–க்கும் மேற்பட்டவர்கள் கூடி இருந்தனர். அப்போது அவரை நோக்கி யாரோ ஒருவர் ‘ஷு’வை வீசி எறிந்தார். தன்னை நோக்கி அது பறந்து வந்ததை பார்த்த ஹிலாரி புத்திசாலிதனமாக குனிந்து கொண்டார்.

எனவே, அந்த ‘ஷு’ அவர் மீது விழவில்லை. கருப்பு மற்றும் ஆரஞ்ச் நிறத்தில் இது இருந்தது. ‘ஷு’வுடன் சேர்த்து சில பேப்பர்கள் பந்து போல் சுருட்டப்பட்டு வீசப்பட்டன.

இதற்கிடையே, ‘ஷு’ வீசி விட்டு பின்பக்க வரிசையில் இருந்து ஒரு பெண் அவசரமாக வெளியேறினார். எனவே, அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவரது பெயர் இலென் ரோசன் என தெரிய வந்தது. டென்வர் நகரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவர் எதற்காக ஹிலாரி மீது ‘ஷு’ வீசினார் என தெரியவில்லை.

அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தன் மீது ‘ஷு’ வீசப்பட்டதை ஹிலாரி கிளிண்டன் சர்வ சாதாரணமாக எடுத்து கொண்டார்.

‘ஷு’ வீசிய பிறகும் தொடர்ந்து பேசிய அவர். ‘‘யாரோ என் மீது ஏதோ வீசினார்கள். கழிவுகள் எதையும் விசவில்லை. அது எனது நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும். அவர் என்மீது ‘சாப்ட்பால்’ போன்று எதையும் வீசி விளையாடவில்லை ஜோக் அடித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி, இன்று அதிகாலை நெடுங்கேணியில் சுடப்பட்டார்!
Next post கோபியின் துப்பாக்கிச் சூட்டில், இராணுவ வீரர் பலியாகவில்லை; கோபி, தேவியன் உட்பட்ட மூவரின் சடலங்கள் மீட்பு!