திருமண வீட்டில் சிரிக்க, தீவிரவாதிகள் தடை!

Read Time:2 Minute, 1 Second

chinaசீனாவில் பாகிஸ்தான் எல்லையில் ஸின்ஜியாங் மாகாணம் உள்ளது. அங்குள்ள உகியார் பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் அரசுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உகியார் பகுதியை பிரித்து தனி நாடு வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர். கடந்த அக்டோபரில், பெய்ஜிங்கின் டினாமென் சதுக்கத்தில் கார்குண்டு தாக்குதல் நடத்தினார்கள். சமீபத்தில் தெற்கு சீனாவின் குன்மிங் ரெயில் நிலையத்தில் பயணிகளை கத்தியால் குத்தியதில் 29 பேர் பலியாகினர்.

இஸ்லாமிய தீவிரவாதிகளான இவர்கள் உகியாரில் வாழும் முஸ்லிம்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். டி.வி. நிகழ்ச்சிகளை தடை செய்தல், ரேடியோ கேட்பது, பத்திரிகைகள் படிப்பது, பாட்டு பாடுவது மற்றும் நடனமாட தடை விதித்துள்ளனர்.

அனைத்துக்கும் மேலாக திருமண வீட்டில் மகிழ்ச்சிகரமான தருணங்களில் ஒருவரை ஒருவர் சந்தித்து சிரித்து மகிழக்கூடாது. சாவு வீட்டில் துக்கம் தாங்காமல் அழக்கூடாது என்றும் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இது குறித்து ஸின்ஜியாங் மாகாண கவர்னர் சீன அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதையல் தோண்டிய பிக்குவிற்கு விளக்கமறியல்
Next post நோர்வே தமிழ் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த படமாக பரதேசி தேர்வு