நோர்டிக் நாடுகளின் பதில் யூன் 29 இல் வெளியாகும்: ஹான்ஸ் பிறட்ஸ்கர

Read Time:3 Minute, 48 Second

norweflagnew.gifநோர்டிக் நாடுகளின் பதில் எதிர்வரும் வியாழக்கிழமை (29.06.06) வெளியாகும் என்று இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் தெரிவித்துள்ளார். புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினரை நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார்.் புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்தில் புதன்கிழமை காலை 10 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இருதரப்பினருக்கும், யூன் 8 ஆம் திகதி நோர்வே அரசு அனுப்பிய கடிதத்திற்கு, நேற்று முன்தினம் விடுதலைப் புலிகள் பதில் அனுப்பியிருந்தனர். அந்தக் கடிதத்திற்கான பதிலை நோர்வே எப்போது வழங்கும் என்று கேட்கப்பட்ட போது, நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளுடனும் கலந்தாலோசித்த பின்னர், யூன் 29 இல் அதற்கான பதில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
் புலிகள் பதில் அனுப்பியுள்ளதை உறுதிசெய்துள்ள ஹான்ஸ் பிறட்ஸ்கர், புலிகளின் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை, அனுசரணையாளர்கள் என்ற வகையில் தாம் ஏற்றுக்கொள்கின்ற போதிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையைக் காரணம் காட்டி, அந்நாடுகளின் பிரதிநிதிகளை கண்காணிப்பில் ஈடுபட வேண்டாமெனக் கோரியிருப்பது கவலைக்குரியதுதான் என்று குறிப்பிட்டார்.

தடை செய்த நாடுகளின் அங்கத்தவர்கள், நடுநிலைமையுடன் செயற்பட வாய்ப்பில்லை என்பதில் புலிகள் தெளிவான கருத்துடன் உள்ளனர் என்று தெரிவித்த பிறட்ஸ்கர், தடைசெய்த பின்னர், உறவை முன்போன்று பேணலாம் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை என்று விளக்கமளித்தார்.

சர்வதேச கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பணியை பொறுப்புணர்வுடன் செய்ததாகவே நாம் கருதுகிறோம். ஐந்து நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளும் கடந்த நான்கரை வருடங்களாக, மிகச் சிறப்பாக தங்கள் பணியைப் புரிந்துள்ள போதிலும், ஐரோப்பிய ஒன்றியத் தடையின் பின்னர், அவர்களது பணி நடுநிலைமையுடையதாக இருக்குமென புலிகள் கருதவில்லை. இருப்பினும் இது எமக்குக் கவலையளிக்கும் ஒரு விடயம்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு திரும்பிய பின்னர், சிறிலங்கா அரச தரப்பினரைச் சந்திக்கவுள்ள பிறட்ஸ்கர், அவர்களது பதில் தொடர்பாக விவாதிக்கவுள்ளதாகத் தெரிவித்ததுடன், இரு தரப்பினருக்குமான பதில் யூன் 29 இல் வெளியாகும் என்றும் உறுதியளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வெளிவிவகார அமைச்சரின் இந்திய விஜயம்
Next post இனியும் பொறுமை காட்ட முடியாது: தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்- விடுதலைப்புலிகள் மிரட்டல்