நவி பிள்ளையின் நாயைக் கூட, இலங்கையில் விசாரணை மேற்கொள்ள அனுமதியோம் –நிமல் சிறிபால

Read Time:1 Minute, 56 Second

un.navipiஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் உள்ளக செயற்பாடுகளில் தலையீடு செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

பதுளையில் இன்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போது ஜெனிவா பிரேரணை உள்ளது. ஏன் நாம் அதனை எதிர்க்கின்றோம். எமக்கென்று மகத்துவம் உள்ளது. நாட்டிலுள்ள உள்ளக விவகாரங்களில் வெளித் தரப்பினர் தலையீடு செய்வதை நாம் விரும்பவில்லை.

அதற்கு இடமளிக்கவும் மாட்டோம். எமது வீட்டில் பிரச்சினை இருந்தால் நாமே அதற்கு தீர்வு காண வேண்டும். எமது நாட்டில் பிரச்சினை இருந்தால் நாமே அதற்கும் தீர்வினை காண வேண்டும்.

இதன் காரணமாகவே மேதகு ஜனாதிபதியும் எமது அரசாங்கமும் சர்வதேச சதிகளுக்கு எதிராக அந்தப் பிரேரணைக்கு எதிராக ஜெனிவாவில் போராடினோம்.

பிள்ளை அம்மையார் அல்ல அவரது நாய்கூட இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதற்கு நாம் இடமளியோம் என்பதை இலங்கையிலும் மிகத் தெளிவாக கூறியுள்ளோம்.

ஏனெனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாட்டின் சுயாதீனத்தன்மை, இறைமை, மற்றும் மகத்துவத்தை பாதுகாப்பதற்கும் நாட்டின் அபிமானத்தை பாதுககாப்பதற்கும் நியமிக்கப்பட்ட ஒருவரவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 140 டாலர் கேட்டா.. 37 ஆயிரம் டாலரை கொட்டிய யு.எஸ். ஏ.டி.எம்.!
Next post அமெரிக்க சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. இந்திய பாதிரியார் நாடு கடத்தல்