ஆறு நாள் குழந்தையை குளத்தில் வீசி, முதலைகளுக்கு இரையாக்க முயற்சித்த; தாயொருவருக்கு கடூழியச் சிறை

Read Time:2 Minute, 15 Second

arrest (3)தனது ஆறே நாளேயான குழந்தையை முதலைகளுக்கு இரையாக குளத்தில் வீசிய பெண்ணொருவருக்கு குருணாகலை உயர் நீதிமன்ற நீதியரசர் சமந்த குமார ரத்னாயக மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையும் 25000 ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி அல்லது அதை அண்மித்த தினமொன்றில் தான் பெற்றெடுத்த குழந்தையை முதலைக்கு இரையாக திக்கவௌ குளத்தில் வீசியதாக இப் பெண்ணுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

சந்தேக நபர் கணவனைப் பிரிந்து வேறொரு நபருடன் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாக குழந்தை பிறந்ததாகவும் குழந்தையை வளர்க்க வசதி இல்லாத காரணத்தினால் முதலைகள் இரையாக்கிக் கொள்ளும் என்ற எண்ணத்தில் குழந்தையை திக்கவௌ குளத்த்தில் தூக்கி எறிந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இருந்தும் சந்தேக நபரான பெண் தூக்கியெறிந்த குழந்தை குளத்தில் விழாமல் குளக்கரையில் விழுந்துள்ளது. என்றும் குளத்துக்கு நீராட வந்த கிராமவாசிகள் குழந்தையைக் காப்பாற்றி கிரிபாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் சிறுவர் இல்லத்தில் வளரும் இக்குழந்தைக்கு இப்போது ஒரு வயதாகின்றது. இக் குழந்தைக்கு இரண்டு இலட்ச ரூபாவை நஷ்டஈடாக வழங்கும் படியும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எல்லா கதாநாயகர்களுடனும், முத்தக்காட்சியில் நடிக்க தயார்: லட்சுமி மேனன்
Next post ஆணின் விரலை வெட்டி துண்டாடிய பெண்!