EPDPகமல் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரா? நிரூபித்தால் மட்டுமே, அனுமதியென நீதிமன்றம் உத்தரவு

Read Time:2 Minute, 21 Second

epdp.kamal-07வடக்கு மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்வதாயின் உறுப்பினர் பதவியில் தொடர்ந்தும் உள்ளமையினை மன்றிடம் நிரூபிக்க வேண்டும் என்றும் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்பதை கவனத்தில் கொண்டு மாகாண சபை அமர்வுகளில் பங்குபற்ற நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

கமலேந்திரன் ஈ.பி.டி.பி யின் உறுப்பினர் பதவியில் இருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்தும் அண்மையில் நீக்கப்பட்டிருந்தார்.

இதனால் அவர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.

இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போதே நீதவான்’ சந்தேக நபரான கமல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் என்பதை தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்த வேண்டும்.

எனவே எதிர்வரும் மாகாண சபை அமர்வில் கமல் கலந்து கொள்வதாயின் அவர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்பதை மன்றுக்கு தெரியப்படுத்தினால் மாத்திரமே அனுமதி வழங்கப்படும்’ என்று மன்றில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்
Next post சுவிட்சர்லாந்து ரயிலில் 19.5 இன்ச் பாம்பு, 450 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்…