(PHOTOS) 10வருட காலமாக, நிரந்தரமாக திருமண ஆடை அணியும் பெண்

Read Time:1 Minute, 53 Second

002lகடந்த 10வருட காலமாக பெண்ணொருவர் தனது 4திருமண ஆடைகளையும் மாறி மாறி அணிந்து வாழும் விசித்திர சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

ஷாங்டொங் மாகாணத்தில் ஜிமோ நகரிலுள்ள லியுஜியஸுவாங் பிரதேசத்தை சேர்ந்த ஸியாங் ஜுன்பெங் (47 வயது) என்ற பெண்ணே தனது பண்ணையிலான பணி நேரம் தவிர்ந்த நேரத்தில் தனது திருமண ஆடைகளை நிரந்தரமாக அணிந்து வருகிறார்.

அவர் 20வயது யுவதியாக இருந்த சமயத்தில் கடத்தப்பட்டு வயோதிபர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அந்த வயோதிப கணவரே ஸியாங் ஜுன் பெங்கை அடிமையாக நடத்தி வயல் வேலைகளில் ஈடுபட நிர்ப்பந்தித்து வந்தார்.

இந்நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்ற ஸியாங் ஜுன் பெங்கிற்கு பெண்ணொருவர் உதவ முன்வந்தார்.

அந்தப் பெண் மூலமாக அவரின் சகோதரரான ஸனு ஸெங் லியாங்கின் அறிமுகம் ஸியாங் ஜுன்னுக்கு கிடைத்தது.

இதனையடுத்து 2004ஆம் ஆண்டில் ஸுஸெங் ஸியாங்கும் ஸியாங் ஜுன்பெங்கும் திருமணம் செய்தனர்.

இந்நிலையில் தனது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய புதிய திருமணத்தை என்றென்றும் கொண்டாட விரும்பிய ஸியாங் ஜுன்பெங் தனது திருமண ஆடைகளுக்கு மேலதிகமாக மேலும் 3 ஆடை வாங்கி அவற்றை மாறி அணிந்து வருகிறார்.

002k

002m

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்திடம் சரணடைந்த முழுக்குடும்பத்தையும் காணவில்லை
Next post நீதிக்காக கூண்டுக்கள் அடைத்து கொண்ட, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி