(PHOTOS) உயிருக்காக போராடிய தந்தைக்காக, 11 வயது மகளுக்கு விநோத திருமணச்சடங்கு

Read Time:2 Minute, 1 Second

002jதனது 11 வயது மகள் திருமண வயதை அடைந்து திருமணம் செய்யும் வரை தான் உயிருடன் இருக்கப் போவதில்லை என கவலையடைந்திருந்த மோசமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தந்தையொருவரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக மணமகனின்றி திருமண நிகழ்வொன்று இடம்பெற்ற நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

முர்ரியரா நகரைச் சேர்ந்த ஜிம் ஸெட்ஸ் என்பவரே தனது 11 வயது மகளாகிய ஜோஸியின் திருமணத்தைப் பார்க்காமல் மரணமாகப் போகிறோம் என்று கவலையடைந்திருந்தார்.

இந்நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஜிம் ஸெஸ்டாவின் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தினர் தீர்மானித்தனர்.

கடந்த மார்ச் 14ஆம் திகதி இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் இன்று புதன்கிழமை செய்தியினை வெளியிட்டிருந்தது.

மணமகனற்ற இந்த திருமண நிகழ்வில் திருமண ஆடை அணிந்திருந்த தனது மகளை ஜிம் ஸெஸ்ட்டர் திருமண மேடை வரையிலான நடைபாதையில் கையைப்பற்றி அழைத்து வந்தார்.

இந்நிலையில் மேடையில் தயாராக காத்திருந்த மத போதகர் அவர்கள் இருவரையும் ‘தந்தை மற்றும் மகள்’ என அறிவிப்புச் செய்தார்.

ஜோஸின் 11 ஆவது பிறந்த தினத்திலேயே இந்த திருமணம் வைபவம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

002h

002i

002j

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கென்யாவின் முஸ்லிம் மதகுரு மகபுரி சுட்டுக் கொலை
Next post பிரித்தானியாவின் இளவயது ‘தாத்தா’வாகப்போகும் இளைஞன்: 14 வயதில் தந்தையானவரின் 13 வயது மகள் கர்ப்பம்